‘‘200,000-க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் இந்துக்கள் ஆவர். நாங்கள் இத்தாலியக் குடியரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதம்’’ என இத்தாலிய இந்து ஒன்றியத்தின் தலைவர் ஃபிராங்கோ டி மரியா ஜெயேந்திரநாதா தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இத்தாலியில் சுமார் 223,000 இந்துக்கள் வசித்து வருகின்றனர். இது மொத்த மக்கள்தொகையில் 0.4%ஐ உள்ளடக்கியது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்களை தவிர 2 லட்சம் இத்தாலியர்கள் இந்துக்களாக மாறியுள்ளனர். ஃபிராங்கோ டி மரியா ஜெயேந்திரநாதா இத்தாலிய இந்து யூனியன் தலைவராக இருக்கிறார்.