உக்ரைன் போரில் தோற்றுவிட்டது.. ரஷ்யா தான் பலமான நாடு.. கடுப்பாகி கத்திய டிரம்ப்!

Published : Dec 10, 2025, 04:34 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் பலவீனமாகவும் சிதைந்தும் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

PREV
14
ஐரோப்பாவை மீது பாயும் டிரம்ப்

ஐரோப்பிய நாடுகள் பலவீனமாகவும் சிதைந்தும் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நேர்காணலில் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு இனி அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்று டிரம்ப் நிர்வாகம் அறிக்கை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இவ்வாறு பேசியிருக்கிறார்.

பொலிடிகோவுக்கு (Politico) அளித்த விரிவான நேர்காணலில் டிரம்ப் தெரிவித்த இந்த கருத்துக்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் மற்றும் உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான முரண்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது.

24
உக்ரைன் சமரசம் செய்ய வேண்டும்

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் திட்டத்தின் சில பகுதிகளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ள நிலையில், அவர் சமாதான வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும்" என்று டிரம்ப் கூறினார்.

உக்ரைன் ராணுவம் போரில் தோற்று வருவதாக சுட்டிக் காட்டிய டிரம்ப், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பரிந்துரைத்தார்.

உக்ரைனின் தலைமை தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுவதற்கு போரைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய டிரம்ப், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

34
அமெரிக்காவின் போர்நிறுத்தத் திட்டம்

அமெரிக்காவின் புதிய போர்நிறுத்தத் திட்ட வரைவை ஜெலென்ஸ்கி படிக்கவில்லை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். “அவர் அதைப் படித்தால் நன்றாக இருக்கும். பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர் அதைப் படிப்பது உண்மையில் நல்லது,” என்றார்.

அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்தத் திட்டத்தின் பல கூறுகள், ரஷ்யா முன்வைத்த கோரிக்கைகளைப் பிரதிபலிக்கின்றன எனக் கூறப்படுகிறது. இது ஐரோப்பா முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

44
ரஷ்யாவுக்கு வெற்றி உறுதி

ரஷ்யாவை விட உக்ரைன் மிகச் சிறிய நாடு என்பதால், ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று டிரம்ப் தெரிவித்தார்.

“ரஷ்யாவின் கை ஓங்கி உள்ளது. அது எப்போதும் அப்படித்தான். அவர்கள் மிகப் பெரியவர்கள். அவர்கள் மிகவும் பலமானவர்கள்,” என்று டிரம்ப் கூறினார். உக்ரைனின் வீரத்தை டிரம்ப் பாராட்டிய போதிலும், ஒரு கட்டத்தில் பலமானவர்ள் தான் வெல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories