தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வார வாரம் வெளியாகும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 46வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரையில் தனிக்காட்டு ராஜாவாக சன் டிவி இருந்து வந்தது. ஆனால் 2015-ம் ஆண்டுக்கு பின் நிலைமை தலைகீழாக மாறியது. சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களும் கோலோச்ச தொடங்கின. இதனால் டிஆர்பி ரேஸிலும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொடர்கள் அணிவகுத்து வருகின்றன. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 46வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி, விஜய் டிவி சீரியல்கள் முன்னேறி இருக்கின்றன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
211
10. சின்ன மருமகள்
இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் பட்டியலில் விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 7.34 டிஆர்பி-யை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.25 புள்ளிகளை பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது.
311
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரம் 8.09 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று 9வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் அதைவிட குறைவாக (7.64) டிஆர்பி பெற்று அதே இடத்தை தக்கவைத்து இருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரம் 8.91 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. எதிர்நீச்சல் 2 சீரியல் இந்த வாரம் 8.33 புள்ளிகளுடன் 8-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
511
7. மருமகள்
சன் டிவியின் மருமகள் சீரியல் கடந்த வாரம் 8.62 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 8.35 புள்ளிகளை பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது.
611
6. அன்னம்
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான அன்னம் சீரியல் கடந்த வாரம் 8.63 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 8.54 டிஆர்பி ரேட்டிங் பெற்று ஆறாம் இடத்தை தக்கவைத்து இருக்கிறது.
711
5. அய்யனார் துணை
விஜய் டிவியில் டிரெண்டிங் சீரியலாக உள்ள அய்யனார் துணை கடந்த வாரம் 8.55 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.63 புள்ளிகளை பெற்று 5-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
811
4. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை, கடந்த வாரம் 9.35 டிஆர்பி ரேட்டிங் உடன் 4ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 8.78 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்க வைத்து உள்ளது.
911
3. சிங்கப்பெண்ணே
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல், கடந்த வாரம் 9.48 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு, 8.94 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
1011
2. கயல்
சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் 9.41 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.10 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
1111
1. மூன்று முடிச்சு
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலான மூன்று முடிச்சு, கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் முதலிடத்தை தக்கவைத்து உள்ளது. கடந்த வாரம் 10.18 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.61 ரேட்டிங்கை பெற்றுள்ளது.