கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!

Published : Mar 05, 2026, 12:39 PM IST

Reshma Muralidharan Biography In Tamil: சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியலின் ஹீரோயினியாக வலம் வரும் ரேஷ்மா முரளிதரன் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

PREV
15
நடிகை ரேஷ்மா முரளிதரன்:

கேரளாவை சேர்ந்த ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல்முறையாக டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இவர் ஒரு உடை வடிவமைப்பாளராக படித்திருந்து பணியாற்றி வந்திருக்கிறார்.2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்று டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே' பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் இவருக்கு ரசிகர் பட்டாளத்தையே ரசிகர்களை வாரிக் குவித்தது.அந்த சீரியலைத் தொடர்ந்து, கலர்ஸ் தமிழில் சேனலில், 'அபி டெய்லர்' என்ற சீரியலில் நடித்தார். பூவே பூச்சூடவா சீரியலில் தன்னுடன் நடித்த நடிகரும், தொகுப்பாளருமான மதன் பாண்டியனை காதலித்த நிலையில் 2021ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

25
முடிவுக்கு வந்த சீரியல்:

 திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா, விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்தார். இந்த சீரியலில் அவர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீக்கிரம் முடிவு வரும் என்று எதிர்பார்க்காத நிலையில் , அந்த சீரியல் திடீரென பல காரணங்களால் சீக்கிரமாகவே முடிவுக்கு வந்தது இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. அதன் பிறகு சின்னதுறையில் எப்படி கால் வைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

35
செல்லமே செல்லமே:

எதிர்பாக்காத வகையில் சன் டிவியில் இருந்து இவருக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பல நிபந்தனைகள் இவரிடம் இருந்தாலும் இந்த சீரியலுக்காக அவர் அனைத்தையும் சரி செய்து கொண்டார். இதுதான் சன் டிவியில் மாலை 6:30 மணி அளவில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியல். இதில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியல் தொடங்குவதற்கு முன்பு சீரியல் அறிமுகமாகும் போது ஒரு தனி பெண்மணியாக ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற உதாரணத்தோடு சன் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமாகினார் ரேஷ்மா முரளிதரன். அந்த முதல் கட்சிலேயே வீட்டு இல்லத்தை அரசிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். தற்போது இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளமே குவிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

45
கிளாமரில் அசத்தும் ரேஷ்மா முரளிதரன்:

 இவர் ஒரு உடை வடிவமைப்பாளர்கள் இருந்தாலும் மிஸ் மெட்ராஸ் அழைக்குப் போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றவர். சொல்லவா வேண்டும் இவருக்கு கிளாமர் எப்படி செய்ய வேண்டும் என்று அதே வகையில் இவருடைய அழகும் வடிவமும் இவருக்கு பல வாய்ப்புகளை அள்ளி கொடுத்து வருகின்றது. சிறந்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ரேஷ்மா முரளிதரன். இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டிலேயே சென்னையிலேயே வாழ்ந்திருக்கிறார். இவர் சீக்கிரம் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

55
சின்னத்திரையில் சம்பளம்:

நடிகை ரேஷ்மா முரளிதரன் சின்னத்திரை சீரியல் அவர் பெரும் சம்பளம் 20 ஆயிரத்தில் இருந்து முப்பதாயிரம் ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் செல்லமே செல்லமே சீரியலில் அவர் குறைந்தபட்சமாக 25 இல் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஒரு நாளுக்கு சம்பளமாக பெறப்படும் என்று கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories