சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்துவின் சதியால் ரவி முத்துவுக்கு எதிராக திரும்பி உள்ளார். இதனால் வீட்டில் மேலும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் - ரோகிணி பிரச்சனை ஒருபுறம் இருக்க, மறுபுறம் நீத்துவின் தலையீட்டால் ரவிக்கும் ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். நீத்து தான் ரவியை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளதால் கோபமடைந்த ஸ்ருதி தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த நீத்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் வீட்டுக்கு வருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இப்படி குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய நீத்துவை அவரது ரெஸ்டாரண்டுக்கே சென்று எச்சரித்திருந்தார் முத்து. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
கொளுத்தப்படும் நீத்துவின் ரெஸ்டாரண்ட்
முத்து நீத்துவை மிரட்டியதோடு, இனி ரவி வாழ்க்கையில் குறுக்கிட்டால் உன் ரெஸ்டாரண்டை அடிச்சு ஒடச்சிருவேன் எனவும் கூறிவிட்டு சென்றிருந்தார். அவர் நீத்துவை மிரட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், அன்று இரவே, நீத்துவின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்களை திறந்துவிட்டு, ரெஸ்டாரண்டை தீவைத்து கொளுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நீத்துவின் வீட்டுக்கு சென்று அவரது காலை அடித்து உடைத்திருக்கிறார்கள்.
35
காயமடைந்த நீத்து
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீத்து, ரவிக்கு போன் போட்டு நடந்ததை கூறி இருக்கிறார். நேற்று உன்னுடைய அண்ணன் வந்து என்னை மிரட்டிவிட்டு சென்றார். இரவில் ஹோட்டலை தீயிட்டு கொளுத்தியதோடு, என்னையும் ஆள் வைத்து அடித்துவிட்டார் என்று சொன்ன நீத்து, போலீஸ் வந்து கேட்டபோது முத்து தான் இதை செய்தார் என சொல்லாமல் இது ஒரு விபத்து என கூறிவிடுகிறார்.
இதையெல்லாம் அருகிலிருந்து கேட்ட ரவி, தனக்காக தன் அண்ணனை நீத்து போலீசிடம் மாட்டிவிடாமல் இருப்பதாக நினைத்தது மட்டுமின்றி, அவர் சொன்னதெல்லாம் உண்மை எனவும் நம்பிவிடுகிறார். இதையடுத்து கோபத்துடன் வீட்டுக்கு செல்லும் ரவி அங்கு பிரச்சனை பண்ணுகிறார். வீட்டுக்குள் வந்ததும் நேராக முத்துவின் சட்டையை பிடித்து ஏண்டா இப்படி பண்ணுன என கேட்கிறார்.
55
முத்துவிடம் சண்டைபோட்ட ரவி
என்னடா ஆச்சு என கேட்கையில் இவன் நீத்துவின் ரெஸ்டாரண்டை தீ வச்சு கொளுத்திருக்கான் என்று சொல்லி சண்டை போடுகிறார். அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என மீனா சொல்லியும் ரவி கேட்கவில்லை. பின்னர் உண்மையை சொன்ன முத்து, நான் நீத்துவை சும்மா மிரட்டுனேன், ஆனா அவளோட ரெஸ்டாரண்டை சத்தியமா நான் கொளுத்தல என சொல்லுகிறார். ஆனால் ரவி இதையெல்லாம் நம்பும் மனநிலையில் இல்லை. இதன்பின்னர் நீத்துவிடம் இருந்து போன் வந்ததால் ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்றுவிடுகிறார் ரவி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.