Raji and Meena Controversial Fight : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 645ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் சொந்தமாக காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை திறந்ததைத் தொடர்ந்து பாண்டியன் குடும்பம் மற்றும் பழனிவேல் குடும்பம் என்று இரண்டாக பிரிந்தது. ஏற்கனவே பாண்டியன் குடும்பத்திற்கும் சக்திவேல் மற்றும் முத்துவேல் குடும்பத்திற்கும் சண்டை இருந்து வரும் நிலையில் இப்போது பழனிவேலுவிற்கும் பாண்டியனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
23
காந்திமதி ஸ்டோர்ஸ்
தன்னிடம் சொல்லாமல் தனது கடை இருக்கும் அதே தெருவில் மிகப்பெரிய கடையை திறந்திருக்கும் பழனிவேல் தன்னை பழிவாங்கவும், தனக்கு துரோகம் செய்யவும் கடை திறந்திருப்பதாக கூறி அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்திவிட்டார். அதுமட்டுமின்றி கடைக்கு சென்ற செந்தில் பழனிவேலுவிடம் அடிதடியில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் கடை திறப்பு விழாவை முடித்துக் கொண்ட காந்திமதி, வடிவு, மாரி ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்களிடம் கோமதி சண்டைக்கு சென்றார்.
33
மீனா மற்றும் ராஜீக்கு இடையில் சண்டை
இதற்கு எல்லாம் காரணம் தனது அம்மா தான் என்று கூறி அவருடன் சண்டையிட்டார். அப்போது வடிவு குறுக்கிடவே அவருக்கும் மீனாவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ராஜீயை கடுமையாக பாதிக்கவே, மீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் என்னுடைய அம்மாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது என்று அக்கா என்று பேசினார். மேலும், இனி வரும் நாட்களில் நாங்கள் இருவருமே ஒன்று சேராத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவரிடம் பேசவே மீனா அழுதுகொண்டே தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.