எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்ட சோகத்தில் இருக்கும் அறிவுக்கரசி, அவரை பழிவாங்க ராவணனோடு சேர்ந்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு மறந்து போன விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவருக்கு மீண்டும் தெரியவருகின்றன. அதில் முதல் விஷயமாக தர்ஷன் - பார்கவியின் கல்யாண மேட்டர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி தர்ஷனை தன் தங்கைக்கு கட்டிவைக்க வேண்டும் என்கிற ஆசையோடு அறிவுக்கரசி இருப்பதை அறிந்த ஈஸ்வரி, அவரை உடனடியாக வீட்டை விட்டு வெளியே துரத்த உத்தரவிட்டதை அடுத்து, கதிர் தரதரவென இழுத்து சென்று அறிவுக்கரசியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
கூட்டு சேரும் ராவணன் - அறிவுக்கரசி
வீதியில் நின்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டிய அறிவுக்கரசியிடம், இனி உன்னால் அவங்களை ஒன்னுமே பண்ண முடியாது என முல்லை சொல்கிறார். அதற்கு அறிவுக்கரசி, நான் அந்த ஆதி குணசேகரன் குடும்பத்தில் ஒருத்தர் விடாம எல்லாரையும் கொல்லுவேன் என சொல்கிறார். அப்போது அறிவுக்கரசிக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் பேசும் நபர், என்ன குணசேகரன் வெளிய தூக்கி போட்டுட்டானா என கேட்கிறார். நீயாரு என அறிவு கேட்க, அதற்கு அவர் நான் யாருங்கிறது முக்கியமா, குணசேகரனை எப்படி அழிக்கப்போறோம் என்கிறது முக்கியமா என கேட்கிறார். உன்னுடைய கிரைம் பார்ட்னர் நான் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார்.
35
அறிவுக்கரசியின் ஆட்டம் ஆரம்பம்
அந்த போனில் பேசிய நபர் வேறுயாருமில்லை ராவணன் ஆதி முத்து தான். அவரும் ஆதி குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்கிற டார்கெட்டோடு சுற்றி வருகிறார். ஏனெனில் ஆதி குணசேகரன், ராவணன் கண்முன்னே அவரது அம்மாவை குத்தி கொலை செய்திருந்தார். அதனால் அவரை பழிவாங்க வேண்டும் என சிறுவயதில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோவும் ராவணனிடம் தான் இருக்கிறது. இதனால் அறிவுக்கரசி அவரோடு கூட்டு சேர்ந்தால், அந்த வீடியோவை காட்டி அவர் குணசேகரனை பிளாக்மெயில் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
மறுபுறம் வீட்டில் ஈஸ்வரிக்கு எல்லா விஷயமும் தெரியவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜனனி. இதனால் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஜீவானந்தத்தை ஞாபகம் இருக்கா என கேட்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு ஒரு கார் வருகிறது. யார் என்று சென்று பார்க்கும் போது அப்பத்தா எண்ட்ரி கொடுக்கிறார். அவரைப் பார்த்ததும் அனைவரும் வாசலுக்கு சென்று அவரிடம் நலம் விசாரிக்கிறார்கள். அவரோ, ஈஸ்வரியை பார்த்ததும் எமோஷனல் ஆகி, நீ நல்லபடியா திரும்பி வந்ததே எனக்கு சந்தோஷம் என பாச மழை பொழிகிறார். ஆனால் ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆன விஷயம் அப்பத்தாவுக்கு தெரியாது.
55
ஈஸ்வரிக்கு உண்மை தெரியவருமா?
ஈஸ்வரியிடம் பேசும் அப்பத்தா, நீ இந்த வீட்டுக்கு திரும்பி வந்த பின்னர் வியட்நாம் வீடு மாதிரி பெரிய சண்டையெல்லாம் வருமோனு நினைச்சேன். ஆனா வீடே ரொம்ப அமைதியா இருக்கு என கேட்கிறார். அப்போது அங்கிருந்த ஆதி குணசேகரன், அப்பத்தா, நீ பாட்டுக்க எதையாவது கிளறிவிட்டுட்டு போயிறாத என சொல்கிறார். நடந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சும் எப்படி நீ இவ்வளவு அமைதியா இருக்க என அப்பத்தா ஈஸ்வரியிடம் கேட்க, அதற்கு அவரோ, எனக்கு புரியல, நீங்க என்ன சொல்றீங்க என கேட்கிறார். அப்பத்தா எல்லா உண்மையையும் ஈஸ்வரியிடம் சொன்னாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.