மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!

Published : Dec 11, 2025, 04:26 PM IST

Pandian Stores 2 Serial Today 660th Episode Highlights: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 660ஆவது எபிசோடில் என்ன நடந்தது, ஹைலைட்ஸ் என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Pandian Stores 2 Serial Today 660th Episode Highlights

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு இடையிலான பஞ்சாயத்துக்கு குழலில் வந்துள்ளார். வீட்டில் கோமதியைத் தவிர வேறு யாரும் அந்தளவிற்கு பேச மாட்டார்கள். அதனால் தம்பி வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற கவலையிலும் வேதனையிலும் குழலி இப்போது தனது வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்படி இன்றைய 660ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். குழலி பொய் சொல்லி டீச்சராக வேலை சென்றது பற்றியும், திருட்டுத்தனமாக தாலி கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தது பற்றியும் பேசினார். உன்னுடைய பிளான் என்ன, எதுக்கு இந்த குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வந்த, என்னுடைய அப்பாவிற்கு எவ்வளவு அவமானத்தை ஏற்படுத்து கொடுத்துவிட்ட என்று வேதனையில் பேசினார்.

26
Pandian Stores 2 Serial Fight Sene

ஒரு கட்டத்தில் நகை நட்டு விஷயம் பற்றி குழலி கேட்க, வீட்டிலிருந்த மீனா மற்றும் ராஜீ இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் உன்னுடைய அப்பா அம்மா வரவில்லையா வரட்டும் அவர்களை நாக்கை பிடுங்கி சாவது போன்று கேள்வி கேட்கிறேன் என்றார். இதற்கிடையில் பழனிவேலுவின் காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை பற்றிய காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.

36
Vijay TV Pandian Stores 2 Serial

இந்த நிலையில் தான் தங்கமயிலின் அப்பாவும், அம்மாவும் பாண்டியன் வீட்டிற்கு வந்தனர். ஜாலியாக வந்த அவர்களிடம் கோமதி தனது கோபத்தை காட்டினார். அவருக்கு பிறகு குழலி பேசினார். உங்களது குடும்பமே ஏமாற்றுக்கார குடும்பமாக இருந்துள்ளது. இந்த குடும்பத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டுமா? பண்ணுறது எல்லாமே ஏமாற்று வேலை. கண்ணியமாக வாழும் நம்மைப் பார்த்து பிராடு என்றெல்லாம் பேசுறாங்க. மோசமான குடும்பம், பிராடு குடும்பம் என்று குழலி, கோமதி என்று எல்லோருமே சண்டைக்கு சென்றனர்.

46
Pandian Stores 2 Viral Scene

எல்லாமே தெரிஞ்சிடுச்சு, நாம் பேசிய எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு. எத்தனை முறை நான் சொன்னேன், நீ எதுவும் கேட்கவில்லை என்று தங்கமயில் தனது அம்மாவிடம் பேசினார். எல்லோருமே மயில் என்ன படிச்சிருக்கா என்று கேட்க பாக்கியம் காலேஜ் வரைக்கும் படிச்சிருக்கா என்று சொல்ல மாணிக்கம் அவள் MA English Literature படித்திருக்கிறாள். அதுவும் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் கோல்டு மெடல் என்று பெருமையாக பேசவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் வீட்டிலிருருந்து அண்டாவை எடுத்து வந்து மாமனாரின் தலையில் போட பார்த்தார். எல்லோருமே பிடித்து தடுத்து நிறுத்தினர்.

56
Emotional Twist in Pandian Stores 2

என்ன வீட்டிற்கு வரச்சொன்னீங்க என்று வீட்டிற்கு வந்தோம். ஆனால் ஆளாளுக்கு அடிக்க வர்றீங்க. என்னென்னமோ பேசுறீங்க. உண்மையில் அவள் எம் ஏ தான் படித்திருக்கிறாள். ஆனால், சர்ட்டிபிகேட் பஸ்ஸில் தொலைந்துவிட்டது என்று மாணிக்கம் திரும்ப திரும்ப பேசினார். கடைசியில் அவள் 12ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாள் என்று ஏல்லோருக்குமே தெரிந்துவிட்டது. மேலும், சரவணனை விட 2 வயது மூத்தவள் என்ற உண்மையும் தெரிந்துவிட்டது என்று கோமதி சொல்லவே உடனே பாக்கியமும், மயிலும் சைகையாலயே பேசினர். அதில், நகை மேட்டர் தெரியுமா என்று பாக்கியம் கேட்கவே, தெரியாது என்று மயில் தலையை ஆட்டினார்.

66
Pandian stores 2 Promo video Today Episode

இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் கூட தங்கமயில் உண்மையை சொல்ல விரும்பவில்லை. இப்படிப்பட்ட மருமகள் வீட்டிற்கு தேவையா என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்குமே புரியும். மாணிக்கம் மற்றும் பாக்கியம் வீட்டிற்கு வந்த பிறகு அடிதடி சண்டையான நிலையில் பாண்டியன் மட்டும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரைத் தவிர மற்ற அனைவருமே பேசினர். எல்லோருக்கும் உண்மை தெரிந்துவிட்ட நிலையில் பாக்கியமும், மாணிக்கமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கும் நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories