சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!

Published : Mar 04, 2026, 12:14 PM IST

Meena and Saravanan Will Clash in Future Director Next Plan: தங்கமயில் வேண்டாம் என்று சரவணன் முடிவெடுத்த நிலையில் மீனா அவருடன் உறவாடி வருவது இப்போது சரவணனுக்கு தெரிந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
18
Saravanan saving Thangamayil from Meena

Meena and Saravanan Will Clash in Future Director Next Plan: சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனை தான் இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சரவணன் தனக்கு எப்போது விவாகரத்து கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் புதிய டுவிஸ்ட் வைத்துள்ளார். மேலும், தனது மகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இதை வைத்தே பாண்டியன் குடும்பத்தோடு சண்டை போடலாம் என்று பாக்கியம் ரெடியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் மீனா மற்றும் தங்கமயில் இருவரும் உறவாடிக் கொண்டிருக்கும் விஷயம் இப்போது சரவணனுக்கு தெரிந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

28
Pandian Stores 2 today's gripping scenes

தனது அம்மாவுடன் சேர்ந்து கொண்டு தங்கமயில் ஆடிய நாடகம் வெட்டவெளிச்சத்திற்கு வந்த நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான குடும்ப வாழ்க்கையில் பிரிவினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சரவணன் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்ப, பதிலுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பாக்கியம் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அதன் பின்னர் மீனாவைத் தவிர மற்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

38
Reason for Meena vs Saravanan fight

இதில், அரசி மற்றும் ராஜீ இருவரையும் விடுவித்த நிலையில் மற்ற அனைவரும் சிறைக்கு சென்றனர். கோர்ட் விசாரணைக்கு பின்னர், அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக தங்கமயிலுக்கு சொந்தமான எல்லா பொருட்களையும் பாண்டியன் திரும்ப அனுப்பினார். இனிமேலும், தங்கமயில் குடும்பத்திற்கும், நம்ம குடும்பத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றார். அப்போது தான் நகையை வைத்து பாக்கியம் டிராமா ஆடிய நிலையில் கடைசியாக தங்கமயில் உண்மையை சொல்லவே அனைவரும் தப்பித்தனர். 

48
மீனா சரவணன் சண்டைக்கான காரணம்

இல்லையென்றால், நகை மேட்டரிலும் அனைவரும் மாட்டியிருப்பார்கள். இப்படி பல சம்பவங்களுக்கு பிறகு தங்கமயில் மீது சரவணனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இனிமேல் தனது வாழ்க்கையில் தங்கமயில் இல்லை என்று வரும் போதுதான் அவரது முன்னாள் காதலி அஞ்சலியின் எண்ட்ரி இருந்தது. சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசியதோடு போனிலும் பேச ஆரம்பித்தனர். பின்னர் கோயிலிலும் சந்தித்து கொண்டனர். அப்போது மீனா அவர்களை பார்த்துவிட்டார்.

58
Star Vijay Serial Latest News March 2026

இதை பற்றி சரவணனிடம் கேட்கும் போது நானும், அவளும் நண்பர்கள் தான். ஏன் வேறு யாரையாவது நான் திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு என்று கேட்டார். இதற்கு மீனாவிடம் எந்த பதிலும் இல்லை. இந்த சூழலில் தற்கொலைக்கு சென்ற தங்கமயிலை காப்பாற்றி தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தது, பின்னர் அவருக்கு வேலை வாங்கி கொடுத்தது, இப்போது அவர் மாசமாக இருக்கும் நிலையில் அவரை மருத்துவமனைக்கு கூட்டி கொண்டு சென்று கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தது, கடைசியாக சரவணனுக்கு போன் போட்டு கோயிலுக்கு வர சொன்னது எல்லாமே தங்கமயிலுக்காக மீனா பண்ண வேலை.

68
Thangamayil Issue in Pandian Stores 2

இது எல்லாவற்றையும் தங்கமயில், சரவணனிடம் கூறிய நிலையில், மீனாவை என்ன சொல்லி ஏமாற்றினீர்கள். மீனாவையும் உங்களது வழிக்கு கொண்டு போயிட்டீங்களா என்றெல்லாம் கேட்டார். இந்த விஷயம் மட்டும் செந்திலுக்கு தெரிய வந்தால் மீனா மற்றும் செந்திலுக்கு இடையில் பிரச்சனை வெடிக்கும். அதுமட்டுமின்றி சரவணன் மற்றும் மீனாவிற்கும் இடையிலும் கூட சண்டை வரலாம். அப்படி வரும் பட்சத்தில் பாண்டியன் குடும்பத்தில் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிகிறது.

78
Pandian Stores 2 Director Next Plan

இப்போது தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் உண்மையை சரவணனிடம் சொல்ல, அவரும் நம்பவில்லை. இதுவும் பொய் தான். நான் உன்னை விட்டு வந்து மாத கணக்கில் ஆகிவிட்டது. இந்த சூழலில் நீ கர்ப்பம் ஆனதுக்கு நான் காரணம் இல்லை. உன்னுடைய குழந்தைக்கு நான் காரணம் இல்லை என்றேல்லாம் சரவணன் பேச இதையெல்லாம் கேட்டு தங்கமயில் அதிர்ச்சி அடைந்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்த நிலையில் இனி வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

88
Meena vs Saravanan Conflict

சரவணன் மற்றும் தங்கமயில் மீண்டும் ஒன்று சேர்வார்களா? அல்லது சரவணன் மற்றும் அஞ்சலி திருமணம் நடக்குமா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories