எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தன் பெயரில் உள்ள சொத்துக்களை எல்லாம் தன்னுடைய தம்பிகளுக்கு எழுதி வைத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி படிப்படியாக குணமாகி வரும் நிலையில், அவருக்கு மருத்துவமனையில் பணம் கட்ட வேண்டிய சூழல் வந்துள்ளது. அதற்காக ரூ.50 லட்சம் கட்ட வேண்டும் என டாக்டர் சொல்ல, அந்த பணத்தை ஆதி குணசேகரனிடம், இருந்து வாங்கிக் கொடுக்கலாம் என சக்தி கூறுகிறார். அம்மாவின் இந்த நிலமைக்கு காரணமே அவர் தான், இப்போ அவரையே காசு கட்டி நல்லவராக்க போறீங்களா, அவருடைய பணம் வேண்டாம் என முரண்டு பிடிக்கிறார் தர்ஷினி. இறுதியாக அவரிடம் இருந்து கடனாக வாங்க முடிவெடுத்துள்ளார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
சொத்துக்களை பிரித்து எழுதும் ஆதி குணசேகரன்
ஆதி குணசேகரனிடம் வந்து தங்கள் முடிவை கூறுகிறார்கள். அப்போது அவர் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். தான் தன் பெயரில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை கதிர் மற்றும் ஞானத்திடம் ஒப்படைக்க இருப்பதாகவும் அதற்காக தான் ஆடிட்டரை வரச் சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார். ஆடிட்டர் வந்த பின்னர் கதிர் மற்றும் ஞானத்தின் பெயரில் மாற்றப்பட்ட சொத்துக்களுக்காக அவர்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். ஆதி குணசேகரன் எதற்காக சொத்துக்களை திடீரென தன் தம்பிகள் பெயருக்கு மாற்றுகிறார் என ஜனனி குழம்பிப் போய் இருக்கிறார்.
35
மீண்டும் ஜெயிலுக்கு போகும் ஆதி குணசேகரன்
அப்போது தான் ஆடிட்டர் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். அதன்படி ஆதி குணசேகரனின் ஜாமின் ரத்தாகிவிட்டதாகவும். அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல இருப்பதால் தான் அவசர அவசரமாக தன் பெயரில் உள்ள சொத்துக்களை தம்பிகள் பெயருக்கு மாற்றுகிறார் என ஆடிட்டர் சொல்லிவிடுகிறார். இதன்பின்னர் ஜனனிக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவருகிறது. இவர் எதுவும் காரணம் இல்லாம இப்படி செய்யமாட்டாரே என நினைத்துக் கொண்டிருந்த ஜனனிக்கு ஒரு வழியாக அவர் நல்லவர் வேஷம் போடுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஆதி குணசேகரனின் ஜாமின் ரத்தாவதற்கான காரணம் மதிவதினி தான் என்கிற உண்மையும் ஜனனிக்கு தெரியவந்துள்ளது. அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் தான் ஆதி குணசேகரன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாம். தன்னை மீண்டும் ஜெயிலுக்கு தள்ளவைத்த மதிவதிணி மீது கடும் கோபத்தில் இருக்கும் ஆதி குணசேகரன், அவரை பழிவாங்க பிளான் போடுகிறார். இதற்காக தன்னுடைய தம்பிகளை தனியாக அழைத்து சென்று அவர்களிடம் என்ன செய்யலாம் என திட்டம் தீட்டுகிறார் ஆதி குணசேகரன்.
55
அடுத்த ட்விஸ்ட் என்ன?
ஆதி குணசேகரன் நிச்சயம் மதிவதிணிக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதால், அவரை அதிலிருந்து காப்பாற்ற ஜனனியும் களத்தில் குதிக்க உள்ளார். ஜனனியை எந்த பிரச்சனையிலும் தலையிடக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ள சக்தி, இந்த விவகாரத்தில் ஜனனிக்கு சப்போர்ட் பண்ணுவாரா? இல்லையா? ஆதி குணசேகரன் ஜெயிலுக்கு சென்ற பின்னர் அறிவுக்கரசியையும் உள்ளே தூக்கிப் போடுவார்களா? இல்லையா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.