
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் டான்ஸ் போட்டிக்கு சென்றிருந்த ராஜீயை நடுவர்களிடமிருந்து பத்திரமாக காப்பாற்றி கதிர் அழைத்து வந்தார். அதோடு அந்த எபிசோடு முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்றைய 582ஆவது எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அந்த டான்ஸ் போட்டியிலிருந்து வெளியில் வந்த ராஜீ கதிரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். அதன் பிறகு அவரை சமாதானப்படுத்தி தண்ணீர் கொடுத்து காரில் அழைத்து வந்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு இடத்தில் காரை நிறுத்தினார். அப்போது ராஜீ தனது மனக்குமுறை கதிரிடம் கொட்டித் தீர்த்தார். நான் ரொம்பவே பயந்துட்டேன். அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது. ஆனால், சைன் பண்ணிட்ட, போட்டி முழுவதும் கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்றார்கள். நான் மட்டும் தான் அப்படி இருக்கிறேன் என்று நினைத்து திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அதன் பிறகு தான் தெரிந்தது. அங்கு நான் மட்டும் தான் சரியாக இருந்திருக்கிறேன். போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். எனக்கு உயிரே போய்விட்டது என்று கதறி அழுதார்.
அதன் பிறகு கதிர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். என்னை பார்த்தால் எப்படி தெரியுது. நீ கிளம்பி போய்விட்ட, தப்பு என்று தெரிந்தும் என்னிடம் சொல்ல வேண்டியதுதான, அங்கிருந்ததை விட என்னிடம் சொல்வதற்கு உனக்கு ரொம்ப பயமா? நான் தான் பெரிய போலீஸ்காரி என்ற நெனப்போட்டு சுற்றக் கூடாது. அப்படி என்றால் இப்படிதான் ஆகும்.
நீ கிளம்பி போனது சரி, நாம் போகிற இடம் பாதுகாப்பானதா என்றெல்லாம் பார்க்கமாட்டாயா, எதுக்கு உனக்கு இந்த வேலை எல்லாம், வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அவர்களை விட உன்னுடைய வீட்டிற்கு தெரிந்தால் என்னாகும்? நீ என்ன முட்டாளா, உனக்கு என்ன அவ்வளவு திமிரா, நீ எவ்வளவு பெரிய கேடி என்று எனக்கு நன்கு தெரியும். இப்படியெல்லாம் நடக்குமா என்று எதிர்பார்க்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் செய்வதற்கு முன் அதனால் என்னாகும் என்று எதிர்பார்க்க வேண்டும். நாம் செய்வது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.
அப்படியே முந்திரிக் கொட்டை மாதிரி எனக்கு தான் எல்லாமே தெரியும் என்று நினைக்க கூடாது. அங்கிருந்தவர்களை பார்த்தாலே தெரிய வேண்டாமா? என்றெல்லாம் கதிர் திட்டிக் கொண்டிருக்க ராஜீ மூஞ்சிய அப்பாவியாக வைத்துக் கொண்டு கதிரிடம் பேசினார். பின்னர் இருவரும் காரில் ஏறி ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சென்றனர். அங்கு கதிர் தோசை ஆர்டர் செய்ய, ராஜீ எனக்கு பரோட்டா வேண்டும் என்று அடம் பிடித்தார்.
கதிர் தோசை வாங்கு சாப்பிட, ராஜீயால் பரோட்டாவை பிய்க்க கூட முடியவில்லை. அதன் பிறகு மீண்டும் ராஜீக்கு தோசை ஆர்டர் செய்து கொடுத்தார். உனக்கு எப்படி தெரிந்தது என்று ராஜீ கேட்க, அதற்கு நீ பேசும் போது தெரிந்தது. அதன் பிறகு நெட்டில் பார்த்து தெரிந்து, என்னுடைய நண்பர்களிடம் விசாரித்தேன். அப்படி ஒரு போட்டியே நடைபெறவில்லை என்று தெரிந்து கொண்டேன் என்றார்.
இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு ரொமான்ஸாக பேசிக் கொண்டனர். அதில், ராஜீ நீ எனக்காகத்தானே சென்னைக்கு வந்த, டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.10 லட்சம் தருவார்களே அதற்காகத்தானே என்றார். எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்தயா? இல்ல ஒன்றும் புரியவில்லை என்று நினைத்தயா? ஆமாம், அதுக்கு தான் வந்தேன் என்றார் ராஜீ. வீட்டில் தெரியுமா? தெரியாது. எனக்கு உன் மீது கோபம் இல்லை. நான் பதற்றத்தோடு தான் வந்தேன். நீ எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருந்த, நான் வரவில்லை என்றால் என்ன ஆகும்.
எனக்குரிய பைசா பிரச்சனையை நானே டீல் பண்ணிக் கொள்வேன். நீ ஒன்றும் பீல் பண்ண வேண்டாம். எனக்கா நீ கஷ்டப்படுற என்று ராஜீ கேட்க, இல்லவே இல்ல, நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன். இதைத் தொடர்ந்து உன்ன கல்யாணம் பண்ணதுனால் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீ படித்து நல்ல வேலைக்கு போயிருப்ப, நான் கஷ்டப்பட்டு எதுவும் செய்யவில்லை. ரொம்பவே இஷ்டப்பட்டு தான் செய்கிறேன். எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். நீ என்னுடைய வாழ்க்கையில் வந்ததை நான் பார்க்கவில்லை. நீ என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் தான்.
அதன் பிறகு கொஞ்ச நேரம் இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர். மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில் இந்த பார்வை ஒன்றே போதும், அவர்களுக்கு இடையில் ஆயிரம் முறை காதல் பரிமாறக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போதும் கூட, நமக்கு பிடித்தவர்கள் அவர்கள் கனவை எட்டிப் பிடிக்க வேண்டும். அதற்காகத்தான் நான் காலையில் உன்னை ஜாக்கிங் அழைத்து செல்கிறேன்.
நீ போலீஸ் ஆக வேண்டும் என்று கதிர் சொல்லவே ராஜீ அப்படியே புன்னகையில் பூரித்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 582ஆவது எபிசோடு முடிந்தது. இனி வீட்டிற்கு சென்ற பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் என்ன சொல்வார் என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே ராஜீயிடம் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடுவர் கதிரிடம் அடி வாங்கிய நிலையில் அந்த புகைப்படத்தை நெட்டில் பதிவேற்றம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சூழலில் வீட்டிற்கு வந்ததும் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டேன் என்று ராஜீ சொல்வாரா அல்லது வேறேதேனும் காரணம் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.