
தானாக சிக்கலை தேடி சென்றுள்ளார் ரேவதி. கார்த்திகை தீபம் சீரியலில் தனது கணவருக்கு டிரஸ் எடுக்க வந்த இடத்தில் ரேவதி வசமாக சிக்கிக் கொண்ட நிலையில் அடுத்து என்ன நடந்தது, சித்தர் சொன்ன அருள் வாக்கை கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைந்தது பற்றி பார்க்கலாம். இன்னும் ஒரீரு நாட்களில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதற்காக ரேவதி தனது கணவருக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வகையில் திருமண நாளுக்காக காஸ்ட்லியான பைக் ஒன்றை புக் செய்தார்.
அதோடு கணவருக்கான டிரஸ் எடுக்க சென்ற இடத்தில் தனக்கும் சுடிதார் எடுத்தார். அதனை போட்டு பார்க்க டிரஸிங் ரூமிற்கு சென்ற போது அங்கு ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு அங்கு கேமரா வைத்தவரை கண்டுபிடிக்க தனது மொபைல் போனில் வீடியோவை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து கேமரா வைத்தவரை ரேவதி கையும் காலுமாக பிடித்து போலீஸில் ஒப்படைந்தார்.
இதைப் பற்றி கார்த்திக்கிடம் சொன்ன போது அவர் கேட்டு அதிர்ச்சி அடைந்ததோடு ரேவதியை கூட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றார். இது சாதாரண விசயமில்லை. மிகப்பெரிய நெட்வொர்க். ஆதலால் இதை சும்மா விடக் கூடாது என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் கேட்ட போது ஜாமீனில் வெளியில் சென்றுவிட்டதாக கூறினார்.
தனி விமானம் மூலம் மும்பை பறந்த விஜய்.. பின்னணி என்ன? அரசியல் வியூகமா? ஜன நாயகன் அப்டேட்டா?
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நீங்கள் முறையான விசாரனை மேற்கொள்ளவில்லை. இதைப் பற்றி உயரதிகாரிகளிடம் பேசவா என்று கேட்க, இல்லை இல்லை நானே ஆக்ஷன் எடுக்குறேன். உரிய விசாரனை மேற்கொள்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். இது குறித்து போலீஸ் கான்ஸ்டபிள் அந்த நெட்வொர்க் தலைவனுக்கு தெரியப்படுத்தவே ரேவதியை கொலை செய்ய திட்டமிட்டனர். இனிமேலும் அவரை சும்மா விடக் கூடாது என்று போட்டு தள்ள முடிவு செய்தனர்.
அப்போது தான் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் அருகிலுள்ள கோயிலுக்கு சென்றனர். அங்கு சித்தர் இருப்பதை பார்த்து அவர் யார் ஏன் அப்படி இருக்கிறார் என்று விசாரிக்கவே அவரைப் பற்றி அறிந்து கொண்டு அங்கு கொஞ்ச நேரம் நின்றனர். இதைத் தொடர்ந்து சித்தரோ ரேவதியை பெயர் சொல்லி அழைக்க அவரும் அருகில் சென்றார். சித்தர், உன்னுடைய திருமண வாழ்க்கை பிரச்சனையில் தான் ஆரம்பித்திருக்கிறது.
இப்போது கணவருடன் சந்தோஷ வாழ ஆசைப்படுற, அதற்கு நிறைய இடையூறு இருக்கிறது என்று சொல்லி ரேவதியிடம் ஒரு பூவை கொடுத்து கோயில் பிரகாரத்தை ஒரு முறை வலம் வர செய்தார். அதன் பிறகு கார்த்திக்கை கூப்பிட்டார். அப்போது நம்பாத கார்த்திக், ரேவதி உன்னுடைய மனைவி தானே, இன்னும் 2 நாளில் உங்களது திருமண நாள் வருகிறது அல்லவா என்றார். கல்யாண நாளன்று உன்னுடைய மனைவி ரேவதிக்கு மிகப்பெரிய கண்டம் இருக்கிறது. உயிருக்கு ஆபத்தான கண்டம் இருக்கிறது.
ரஜினியுடனான திரைப்படம் எப்போது தொடங்கும்? - ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. அன்று முழுவதும் உன்னுடைய மனைவி ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த ரூபத்திலாவது ஆபத்து வரலாம். அந்த கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டால் அதன் பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது. அவளை அந்த கண்டத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கையில் தான் இருக்கிறது. அன்று அவளை வெளியில் எங்கும் அனுப்ப கூடாது. உன்னுடைய பார்வையில் இருக்க வேண்டும். அதுதான் அவளுக்கு நல்லது.
இந்த ஆபத்திலிருந்து ரேவதி தப்பித்து விட்டால் உங்களது கல்யாண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றார். சித்தர் கூறியதை எல்லாம் கேட்டு கார்த்திக்கிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இதைப் பற்றி ரேவதியிடம் எதுவும் கூறாத நிலையில் மயில்வாகனத்திடம் இது பற்றி தெளிவாக கூறினார். இறுதியாக, தனது மனைவிக்கு சிவனாண்டி மூலமாக ஆபத்து வரக் கூடும் என்று பயந்த கார்த்திக், அவருக்கு போன் போட்டு வார்னிங் கொடுத்தார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் 1156ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளைய 1157ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.