சந்திரகலா விரித்த வலை.. தானாக வந்து சிக்கிய கார்த்திக்! புதையலையும் அலேக்காக ஆட்டைய போட்ட வில்லி - கார்த்திகை தீபம் அதிரடி சீன்!

Published : Mar 01, 2026, 08:35 AM IST

Chandrakala Traps Karthik in Treasure Hunt in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் 1135ஆவது எபிசோடில் புதையலை திருட சந்திரகலா போட்ட பிளான் சக்சஸாகியுள்ளது. அது எப்படி நடந்தது, என்ன பிளான் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
19
Rajarajan in Hospital, Karthigai Deepam Serial Today Episode

Chandrakala Traps Karthik in Treasure Hunt : முன்னுக்கு பின் முரணான காட்சியாக கார்த்திகை தீபம் சீரியலில் புதையல் காட்சி இடம் பெற்றிருந்தது. ஏன், இந்த காட்சி இருக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கான விளக்கம் 1135ஆவது எபிசோடில் கிடைத்துள்ளது. கார்த்திக்கை வீட்டை விட்ட துரத்த சந்திரகலாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தினாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

29
Karthigai Deepam Today 1135th Episode Highlights in Tamil

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தான் புதையல் காட்சி இடம் பெற்றிருந்தது. ஏன் இந்த சீன் தேவையில்லாமல் இருக்கிறது என்று பார்க்கும் போது தான் இந்த சீனை வைத்து வில்லியான சந்திரகலா ஒரு பிளான போட்டார். அந்த பிளானை இப்போது எக்ஸிகியூட் பண்ணி வருகிறார். அதாவது, என்றும் இல்லாததாக கடைக்கு சென்ற ராஜராஜன் டீ குடிக்க விரும்பினார். 

39
Karthigai Deepam 1135 Episode

அவர் டீ கடைக்கு சென்றதை பாலோ பண்ணி சென்ற முத்துவேல் ஒருவரை ஏற்பாடு செய்து அவரது கையில் மயக்க மருந்தை கொடுத்து அனுப்பியுள்ளார். ராஜராஜன் ஆர்டர் செய்த டீயில் அவரும் அந்த மயக்க மருந்தை கலக்க, ராஜராஜனும் அந்த டீயை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அப்போது, ராஜராஜனை கூட்டிக் கொண்டு செல்லும் பழனி என்பவர் சாமுண்டீஸ்வரிக்கு போன் போடுகிறார். எப்படி அந்த பழனியின் நம்பர் சாமுண்டீஸ்வரியிடம் இருந்தது என்று தெரியவில்லை.

49
Zee Tamil Karthigai Deepam Serial

எனினும், அவர் நடந்தவற்றை கூற ஒட்டு மொத்த குடும்பமும் காரில் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஏன் இவ்வளவு விளக்கமாக எழுதுகிறேன் என்றால் அந்தில் விஷயம் இருக்கிறது. சாமுண்டீஸ்வரி சென்ற காரில் சந்திரகலா வரவில்லை. அவர் கேமரா இருக்கும் ரூமிற்கு சென்று எல்லாவற்றையும் ஆஃப் செய்துவிட்டார். பின்னர் தனது கணவருக்கு போன் போட்டு வீட்டில் யாரும் இல்லை. இப்போது வந்து புதையலை எடுத்து செல்லுங்கள் என்று கூறுகிறார்.

59
Karthigai Deepam Serial Treasure Box Episode

அடுத்த காட்சியாக மருத்துவமனையில் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட அனைவரும் இருக்கும் போது அவர்களுடன் சந்திரகலாவும் இருக்கிறார். அது எப்படி என்று தான் தெரியவில்லை. இதை சொல்ல தான் இவ்வளவு விளக்கமாக எழுத வேண்டி இருந்தது. அடுத்ததாக, கார்த்திக்கும் வரவே, எப்படி டீ குடித்த பிறகு மயக்கம் வந்தது. அந்த கடைக்காரர் உங்களுக்கு தெரிந்தவரா? என்றெல்லாம் சந்தேகத்துடன் கேட்டார்.

69
Zee Tamil Karthigai Deepam Latest Twist Today

இதைத் தொடர்ந்து ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் தனியாக சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது இதில் வேறு ஏதும் சதி இருப்பது போன்று தெரிகிறது. நான், வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கார்த்திக் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், அவர் வருவதற்கு முன் வீட்டிற்குள் வந்த முத்துவேல் கள்ளச்சாவி போட்டு புதையல் இருக்கும் ரூமை திறந்து புதையை தேடி எடுக்கும் போது கார் வரும் சத்தம் கேட்டு, முத்துவேல் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறுகிறார்.

79
Karthigai Deepam Serial Chandrakala Master Plan

பின்னர் சந்திராவிற்கு போன் போட்டு கார்த்திக் வந்த விஷயம் பற்றி கூறுகிறார். இதற்கிடையில் ராஜராஜனுக்கும் சரியாகிவிட்டது. அவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு வந்தனர். கார்த்திக்கும் வீட்டில் இருந்தார். மருத்துவமனைக்கு செல்லும் போது காரில் எல்லோருமே செல்லும் போது, அங்கிருந்து வரும் போதும் மட்டும் ராஜராஜன், சாமுண்டீஸ்வரி, சந்திரகலா என்று மூவர் மட்டுமே திரும்ப வந்தனர். அதெப்படி சார்? சரி, கார்த்திக்கை அனுப்பி ரேவதி, ரோகிணி, மயில்வாகனம், சுவாதி ஆகியோரை கூட்டிக் கொண்டு வர ராஜராஜன் சொல்லவே, கார்த்திக்கும் புறப்பட்டுச் சென்றார்.

89
Chandrakala Traps Karthik in Treasure Hunt

அதன் பிறகு கோயிலுக்கு சென்றிருந்த வேலைக்கார அம்மாவும் வர, அவரிடம் சூடாக தண்ணீர் கேட்க அவரும் சமையலறைக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து ராஜராஜன் நடக்க விரும்புவதாக கூறி வெளியில் செல்ல் அவருடன் சாமுண்டீஸ்வரியும் சென்றார். இப்போது வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து சந்திரகலா புதையல் இருக்கும் அறையின் சாவியை எடுத்து புதையலை எடுத்துக் கொண்டிருப்பதோடு 1135ஆவது எபிசோடு முடிந்தது.

99
Karthigai Deepam Serial Today Episode Tamil 2026

அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி அடுத்த எபிசோடில் பார்க்கலாம். இதற்கிடையில் கார்த்திக் வீட்டில் இருக்கும் போது கேமரா இருக்கும் அறைக்கு சென்று கேமராவை ஆன் செய்தாரா இல்லையா என்பது பற்றி புதையல் காணாமல் போன பிறகு யார் எடுத்தார் என்று விசாரிக்கும் போதுதான் தெரியவரும். ஏனென்றால் அவர் வீட்டில் என்ன செய்தார் என்பது தொடர்பான காட்சி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories