பழைய எதிரியை ஏவிவிட்டு ஜனனியின் கொட்டத்தை அடக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Nov 15, 2025, 11:02 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தி கடத்தப்பட்ட நிலையில், அவரை ஆதி குணசேகரன் தான் கடத்தினார் என்பதை அறியும் ஜனனி என்ன முடிவு எடுத்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இராமேஸ்வரம் சென்றிருந்த சக்தி, ஆதி குணசேகரனின் பழைய ரகசியங்களை தேடிக் கண்டுபிடித்தார். குறிப்பாக குணசேகரனின் தந்தை ஆதி முத்துவின் தேவகி என்கிற வட நாட்டு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, அவரது சொத்துக்களை எல்லாம் அபகரித்தது, பின்னர் ஆதி குணசேகரன் தேவகியை தேடிச் சென்று கொலை செய்தது என சக்திக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருகிறது. இதையெல்லாம் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் போனிலேயே கேட்டுவிட்டனர். இதையடுத்து ஊர் திரும்பும் வழியில் சக்தி கடத்தப்பட்டுள்ளார். இதன்பின்னர் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
ஆதி குணசேகரனிடம் சரண்டர் ஆன ஜனனி

ஆதி குணசேகரனின் ஆட்கள் தான் சக்தியை ஏதாவது செய்திருப்பார்கள் என்று ஜனனி சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அவரது போனுக்கு ஒரு வீடியோ வருகிறது. அதில் சக்தியை அடித்து தலைகீழாக தொங்கவிட்டிருக்கிறார்கள். இதைபபார்த்து பதறிப்போன ஜனனி, ஆதி குணசேகரனிடம் சென்று சண்டை போடுகிறார். அவர் தான் இதை செய்யவே இல்லை என சாதிக்கிறார். பின்னர் குணசேகரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ஜனனி, உங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியே சொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடுக்கிறார். பின்னர் ஜனனியை ரூமுக்குள் அழைத்து சென்று பேசுகிறார் குணசேகரன்.

34
யார் அந்த ராமசாமி மெய்யப்பன்?

அப்போது சக்தியை கடத்தி வைத்திருக்கும் நபருக்கு போன் போட்டு ஸ்பீக்கரில் போடும் ஆதி குணசேகரன், என்னப்பா ராமசாமி மெய்யப்பா என கேட்கிறார். இதை அறிந்து ஷாக் ஆகிறார் ஜனனி. ஏனெனில் அந்த ராமசாமி மெய்யப்பன் ஜனனியின் பழைய எதிரி. தர்ஷினியை திருமணம் செய்ய வந்த அவரை அவமானப்படுத்தி அனுப்பினார் ஜனனி. சக்தியும் அதற்கு உடந்தையாக இருந்தார். சொல்லப்போனால் ஜனனியின் பெரியப்பா பையன் தான் இந்த ராமசாமி மெய்யப்பன். ஜனனி அந்த வீடியோவை பார்த்து அலறினாலா என ராமசாமி கேட்க, ஆமா அது வேறு ஒரு தனிக்கதை. நீ அங்கயே இரு நான் உன்னை கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார் குணசேகரன்.

44
சக்தியை காப்பாற்றுவாரா ஜனனி?

இதையடுத்து ஜனனியிடம் பேசும் குணசேகரன், இவன்கிட்ட ஏன் அந்த பொறுப்பை கொடுத்தேன் தெரியுமா... என் தம்பிய அடிங்கடா, கொல்லுங்கடானு சொல்றதுக்கு மனசு வரல. ஆனா இவன் அப்படி நினைக்க மாட்டான். உனக்கு அவனுக்கும் ஏற்கனவே பகை இருக்குல்ல, அந்த பகையை வச்சுகிட்டு எப்படானு காத்துக்கிட்டு இருக்கான். நீ எதாச்சும் ஆட்டம் காட்டுனனு வை, ராமசாமி நீயே முடிவெடுத்துக்கப்பானு ஒரே வார்த்தை தான் எல்லாம் முடிஞ்சு போகும் என சொல்ல, ஜனனி மேலும் பதற்றம் அடைகிறார். இதையடுத்து அவர் சக்தியை எப்படி காப்பாற்றினார் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories