பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கிய கையோடு வீட்டிற்குள் போட்டி களைகட்டத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், "எதன் அடிப்படையில் தினமும் இரண்டு பேரை எடுத்தீர்கள் என்று ஹவுஸ் மேட்ஸ் கேப்டன் ஷாதிகாவிடம்ன் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இது குறித்து விவாதம் தொடங்கியது. இதனால் ஷாதிகா உங்கள் பிரச்சனையை முடித்துக் கொண்டு என்னை அழையுங்கள் என்று சொல்லிவிட்டு கோபமாக செல்கிறார். அப்போது ஜேசன் கௌஷி தனது கருத்தை வெளிப்படையாக கூறி கேப்டனுடன் வாக்குவாததில் ஈடுபடுகிறார். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் விதமே பரபரப்பை ஏற்படுத்துகிறது.
பிக்பாஸ் ஆரம்பித்த 2 நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி வருவது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், போட்டியாளர்களின் கூட்டணி எப்படி மாறும், கேப்டன் ஷாதிகாவின் முடிவுகள் வீட்டிற்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இன்றைய எபிசோடின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.