எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனி தொடங்க உள்ள தமிழ் சோறு பிசினஸுக்கு ஆதி குணசேகரன் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்து வரும் ஆதி குணசேகரனும் அவருடைய தம்பிகளும் ஜனனி தொடங்க இருக்கும் தமிழ் சோறு பிசினஸை எப்படியாவது தடுக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார்கள். அவர்களுக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவுக்கரசி உடனுக்குடன் அப்டேட் செய்து வருகிறார். இதனால் எந்த ரூட்டில் சென்று ஜனனியை லாக் பண்ணலாம் என ஆதி குணசேகரனும் காத்திருக்கிறார். இந்த நிலையில், ஜனனியின் பிசினஸுக்கு ஆணி வேராக இருக்கும் விஷயத்தை தூக்க பிளான் போட்டிருக்கிறார் குணசேகரன். அது என்ன? இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனின் அடுத்த அதிரடி
சொத்தை வைத்து ஜனனியை விரட்ட பார்த்த ஆதி குணசேகரன், அந்த பிளான் சொதப்பியதை அடுத்து, தற்போது அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறார். ஜனனி தமிழ் சோறு பிசினஸுக்காக ஃபுட் டிரக் ஒன்றை வாடகைக்கு வாங்கி, அதனை புதிது போல் ரெடி பண்ணி வைத்திருப்பதை கேள்விப்பட்ட ஆதி குணசேகரன், அந்த வண்டியை எங்கிருந்து வாங்கினார்கள் என்பதைப் பற்றி, அறிவுக்கரசியிடம் விசாரிக்கிறார். அவர் இந்த வண்டியை வாடகைக்கு தான் வாங்கி இருக்கிறார்கள் என்று கூறியதோடு, வண்டி நம்பரையும் ஆதி குணசேகரனிடம் சொல்கிறார்.
34
ஃபுட் டிரக்கை இழக்கும் ஜனனி
இதையடுத்து தன்னுடைய கிரிமினல் புத்தியை காட்டும் ஆதி குணசேகரன், உடனடியாக அந்த வண்டி ஓனருக்கு போன் போட்டு ஒழுங்கு மரியாதையா அந்த வண்டியை எடுத்துட்டு போகாவிட்டால் அதை பீஸ் பீஸ் ஆக்கிவிடுவேன் என மிரட்டுகிறார். இதனால் பதறிப்போகும் அந்த வண்டி உரிமையாளர் எதுக்குடா வம்பு என வீட்டிற்கு சென்று ஜனனியை சந்தித்து, என் வண்டியை உங்களுக்கு வாடகைக்கு விட்டது ரொம்ப தப்பா போச்சு, இது சரிப்பட்டு வராது, நான் என் வண்டியை எடுத்துக்குறேன் என சொல்ல, ஜனனி, தர்ஷினி, நந்தினி, சக்தி, என அனைவரும் அதைக்கேட்டு ஷாக் ஆகிறார்கள்.
பின்னர் ஆதி குணசேகரனிடம் போன் போட்டு பேசும் அறிவுக்கரசி, அவன் வந்து உடனே வண்டியை எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டான். சூப்பர் மாமா நீங்க நினைச்சது நடந்திருச்சு என சந்தோஷப்படுகிறார். இதையடுத்து என்ன ஆனது? வண்டி இல்லாமல் ஃபுட் டிரக் பிசினஸை ஜனனி எப்படி தொடங்கப்போகிறார்? அடிமேல் அடி கொடுக்கும் ஆதி குணசேகரனுக்கு ஜனனி பதிலடி கொடுப்பாரா? குணசேகரனின் சூழ்ச்சியை மீறி ஃபுட் டிரக் பிசினஸை ஜனனி தொடங்குவாரா? ஜனனி எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட முடிவு என்ன? என்பது இனி வரும் எபிசோடுகளில் தான் தெரியவரும்.