வாட்ஸ்அப்பில் குழுவில் இருக்கும் போது, பல நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட செய்திக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு 'பிரைவேட்லி' அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் பதிலளிக்க விரும்பும் செய்தியைத் தொட்டுப் பிடிக்கவும். எளிதாக தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, மேல் வலது மூலையில் உள்ள 3-புள்ளி ஐகானைத் தட்டி, தனிப்பட்ட முறையில் பதிலளிக்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.