Mobile Data: தூங்கும்போது மொபைல் டேட்டா ON-ல் இருக்கா? உடம்புக்கு ஆபத்து, அக்கவுண்ட்டும் காலி!

Published : Aug 28, 2026, 07:32 AM IST

Mobile Data: நீங்கள் தினமும் இரவில் தூங்கும்போது மொபைல் டேட்டாவை ஆன் செய்து விட்டு, மொபை சார்ஜரில் போட்டு தூங்குகிறீர்களா? இதனால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
13
தூங்கும்போது மொபைல் டேட்டா ON-ல் இருக்கா?

நம்மில் பெரும்பாலானோர் தினமும் இரவில் மொபைலை சார்ஜரில் பொருத்திவிட்டு, வைஃபை (Wi-Fi) அல்லது மொபைல் டேட்டாவை (Mobile Data) இயக்கி வைத்துவிட்டு உறங்கிவிடுகிறோம். காலையில் எழுந்து செய்திகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறோம். ஆனால், இரவு முழுவதும் உங்களுடைய மொபைல் உறங்குவதில்லை; அது திரைக்குப் பின்னால் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதனுடைய பாதிப்பு உங்கள் உடலிலும், தொலைபேசியிலும் ஏற்படும்.

ஆழ்ந்த தூக்கம் கெடுகிறது

டேட்டா இயங்கிக்கொண்டிருந்தால், நோட்டிபிகேஷன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் என வரிசையாகத் திரை விளக்கு எரிந்து ஆஃப் ஆகும். நீங்கள் அதனைப் பார்க்காவிட்டாலும், உங்களுடைய ஆழ்மனம் விழித்துக்கொள்ளும். ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில், மொபைல் திரையிலிருந்து வரும் நீல ஒளி நம் தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனை 5 சதவீதம் வரை குறைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஹார்மோன்தான் நமக்குத் தூக்க வரவழைக்கும். இதனால், உங்களுக்குத் தாமதமாகத் தூக்கம் வரும்; அடிக்கடி தூக்கம் கலையும்; காலையில் புத்துணர்ச்சி இருக்காது.

23
பேட்டரியும் ஆயுளும் குறைகின்றன

இரவில் டேட்டா இயங்கிக்கொண்டிருந்தால், பின்னணியில் 20 முதல் 30 செயலிகள் (Apps) வரை இயங்கிக்கொண்டே இருக்கும். ஃபேஸ்புக், கூகுள் போட்டோஸ், ப்ளே ஸ்டோர் போன்றவை தானாகவே ஆட்டோ அப்டேட் ஆகும். இதனால் தொலைபேசி இரவு முழுவதும் சூடாகவே இருக்கும். காலையில் சார்ஜரில் இருந்தாலும் தொலைபேசி சூடாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த அதிகப்படியான வெப்பம், லித்தியம்-அயன் பேட்டரியின் முதன்மை எதிரியாகும். இதனால் பேட்டரி விரைவில் வீங்கிவிடும், அதன் திறன் குறைந்துவிடும்; சில நேரங்களில் வெடிக்கும் அபாயமும் உள்ளது.

தெரியாமலேயே டேட்டா, பணம் மற்றும் ஸ்டோரேஜ் குறைகின்றன

நீங்கள் உறங்கிக்கொண்டிருப்பீர்கள், ஆனால் உங்கள் தொலைபேசியில் 500 MB அளவிற்கு ஒரு செயலி புதுப்பிக்கப்படும்; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றத்திற்குத் தயாராகும். கூகுள் டிரைவ் பேக்கப் எடுக்கும். காலையில் எழுந்து பார்த்தால் 1 முதல் 2 GB தரவு தீர்ந்துபோயிருக்கும். வரம்பிற்குட்பட்ட தரவுத் திட்டத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் பணமும் விரையமாகும். அதுமட்டுமில்லாமல், தேவையற்ற தற்காலிக பைல்களால் மொபைல் ஸ்டேரேஜும் நிரம்பிவிடும்.

33
டேட்டா திருட்டிற்கு இரவே ஏற்ற நேரம்

சைபர் நிபுணர்கள் கூற்றுப்படி, நீங்கள் மொபைலை பயன்படுத்தாத இரவு நேரத்தில்தான் ஹேக்கர்ஸ் மிகவும் தீவிரமாகச் செயல்படுவார்கள். தரவு அல்லது வைஃபை இயங்கிக்கொண்டிருந்தால் மால்வேர் மூலமாக உங்கள் மொபைலில் புகைப்படங்கள், பாஸ்வேர்ட், வங்கியின் ஒருமுறை பயன்படுத்தும் ஓடிபி போன்றவற்றை எளிதாகத் திருடிவிட முடியும். குறிப்பாக, நீங்கள் இலவச அல்லது பொது வைஃபையைப் பயன்படுத்திவிட்டு உறங்கினால், இந்த ஆபத்து 10 மடங்கு அதிகம்.

மன உளைச்சல் மற்றும் காலையில் தலைவலி

இரவு முழுவதும் மின்காந்தக் கதிர்வீச்சு அருகில் இருப்பதால், மூளைக்குச் சரியான ஓய்வு கிடைக்காது. 'ஜர்னல் ஆஃப் என்விரான்மென்டல் ஹெல்த்' அறிக்கையின்படி, தலைக்கு அருகில் தொலைபேசியை வைத்து உறங்கினால், மறுநாள் காலையில் தலைவலி, கவனக்குறைவு மற்றும் எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

இரவில் செய்ய வேண்டிய சரியான வழிமுறைகள்

ஏர்பிளைன் மோட் + வைஃபை ஆஃப்: உறங்கும்போது தொலைபேசியை ஏர் பிளைன் மோட் வைப்பது சிறந்தது. அலாரம் சரியாக ஒலிக்கும்; அதே நேரத்தில் எவ்விதக் கதிர்வீச்சோ, அறிவிப்புகளோ வராது.

அருகில் வைக்க வேண்டாம், தள்ளி வையுங்கள்: மொபைலை தலையணைக்கு அடியிலோ அல்லது தலைக்கு அருகிலோ வைக்காமல், அறையில் உள்ள வேறொரு மேஜையில் வையுங்கள். குறைந்தபட்சம் 3 முதல் 4 அடி தூரம் இருக்கட்டும்.

செட்டிங்க்ஸ், பேக்ரவுண்ட் ஆப்ஸ் ரிப்ரெஷ் அமைப்பை முடக்கிவிடவும். இரவில் 100% சார்ஜ் ஆனதும், மின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்களைப் போலவே உங்கள் மொபைலுக்கும் இரவில் ஓய்வு அவசியம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories