WhatsApp இந்தியாவில் சைபர் மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள புதிய 'சிம் பைண்டிங்' கட்டுப்பாடு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.- தப்பிப்பது எப்படி?
WhatsApp வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்: இனி சிம் கார்டு இல்லாமல் செயல்படாது!
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் இன்று (மார்ச் 1, 2026) முதல் ஒரு மிகப்பெரிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. சைபர் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் 'சிம் பைண்டிங்' (SIM Binding) என்ற புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் கட்டாயமாக்கியுள்ளது.
இதற்கு முன் பிப்ரவரி 28 வரை பயனர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சிம் பைண்டிங் என்றால் என்ன? இதனால் சாதாரண பயனர்களுக்கு என்ன சிக்கல்? விரிவாகப் பார்ப்போம்.
25
சிம் பைண்டிங் (SIM Binding) என்றால் என்ன?
இதுவரை நாம் வாட்ஸ்அப்பை எப்படி பயன்படுத்தினோம்? ஒருமுறை போன் நம்பரை கொடுத்து OTP மூலம் லாகின் செய்துவிட்டால் போதும். அதன்பிறகு அந்த சிம் கார்டை போனிலிருந்து கழற்றிவிட்டாலும் கூட, வைஃபை (Wi-Fi) மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) மூலமாகவோ தடையின்றிப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், இனி அப்படிச் செய்ய முடியாது.
புதிய விதியின்படி, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு எந்த சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த சிம் கார்டு உங்கள் மொபைலிலேயே கட்டாயம் இருக்க வேண்டும். உங்கள் சிம் கார்டு போனிலேயே இருக்கிறதா என்பதை வாட்ஸ்அப் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானியங்கி முறையில் சரிபார்க்கும் (Verification). நீங்கள் சிம்மை வெளியே எடுத்தாலோ, மாற்றினாலோ அல்லது சிம் செயலிழந்தாலோ உடனடியாக உங்கள் வாட்ஸ்அப் கணக்கு லாக் அவுட் (Log out) ஆகிவிடும்.
35
வாட்ஸ்அப் வெப் மற்றும் லேப்டாப் பயனர்களுக்கு சிக்கலா?
இந்த புதிய கட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web), டெஸ்க்டாப் ஆப் மற்றும் டேப்லெட் பயன்படுத்துபவர்கள்தான். நீங்கள் லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தினால், ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை உங்கள் முதன்மை மொபைலில் (Primary Phone) சிம் கார்டு இருக்கிறதா என்பது சரிபார்க்கப்படும்.
சிம் கார்டு இல்லாத டேப்லெட்டுகள் மற்றும் இரண்டாவது மொபைல் போன்களில் (Secondary phones) நீங்கள் அடிக்கடி லாக் அவுட் ஆகி, மீண்டும் மீண்டும் லாகின் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே, லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது உங்கள் முதன்மை மொபைலை அருகிலேயே வைத்திருப்பது நல்லது.
ஆன்லைன் மோசடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவே அரசாங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஸ்கேமர்கள் (Scammers) ஒரு எண்ணை பதிவு செய்துவிட்டு, பின்னர் உலகின் எந்த மூலையில் இருந்தும் வாட்ஸ்அப் மூலமாக மக்களை ஏமாற்றி வந்தனர். இதனால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் சைபர் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சைபர் மோசடிகளால் சுமார் 22,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிம் கார்டு மொபைலிலேயே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், KYC மூலம் சரிபார்க்கப்பட்ட நபரை எளிதாகக் கண்டுபிடித்து, மோசடிகளை பெருமளவு குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.
55
பயனர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்அப் சேவையை எந்தத் தடங்கலும் இன்றிப் பயன்படுத்த, நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் நம்பரும், உங்கள் மொபைலில் உள்ள சிம் கார்டும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உடனடியாக உங்கள் வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் (Update) செய்யுங்கள். தொழில்நுட்பம் வளர வளர பாதுகாப்பு விதிமுறைகளும் மாறுவது இயல்பு என்பதால், இந்தப் புதிய மாற்றத்திற்கு நாம் தயாராகுவது அவசியமாகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.