இந்தியா முழுவதும் முடங்கியது வாட்ஸ்அப் - எக்ஸ் தளத்தில் #WhatsAppDown ட்ரெண்டிங்!
இந்தியாவில் சனிக்கிழமை மாலை வாட்ஸ்அப் திடீர் முடக்கம். பயனர்கள் செய்திகள் அனுப்ப முடியவில்லை என புகார். எக்ஸ் தளத்தில் #WhatsAppDown ட்ரெண்டிங். முழு விவரம் இங்கே.
இந்தியாவில் சனிக்கிழமை மாலை வாட்ஸ்அப் திடீர் முடக்கம். பயனர்கள் செய்திகள் அனுப்ப முடியவில்லை என புகார். எக்ஸ் தளத்தில் #WhatsAppDown ட்ரெண்டிங். முழு விவரம் இங்கே.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இன்று (சனிக்கிழமை) மாலை இந்தியாவில் திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் செய்திகள் அனுப்பவும், ஸ்டேட்டஸ் பதிவேற்றவும் முடியாமல் அவதிப்பட்டனர். இந்த திடீர் முடக்கத்தால் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. பயனர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பகிர்ந்து வருவதுடன், தங்கள் விரக்தியை மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பயனர்கள் வாட்ஸ்அப்பின் முக்கிய செயல்பாடுகளான செய்திகள் அனுப்புவது மற்றும் ஸ்டேட்டஸ் பதிவேற்றுவது ஆகியவற்றில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், இந்த முடக்கம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
"குழுவுக்கு செய்திகள் அனுப்ப முடியவில்லை.. வாட்ஸ்அப் டவுனா? #WhatsApp," என்று எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "@WhatsApp, ஆப் டவுனா? எனக்கு செய்திகள் அனுப்ப முடியல - அனுப்பவே மாட்டேங்குது. வேற யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா? #WhatsAppDown," என்று எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
"இன்னிக்கு இந்தியால @WhatsApp டவுனா? குரூப்ஸ்ல மெசேஜ் அனுப்ப முடியல! ரெட் எக்ஸ்க்ளமேஷன் மார்க் வருது மெசேஜ் அனுப்பும் போது. #whatsappdown #Whatsapp," என்று மற்றொரு எக்ஸ் பயனர் புகார் அளித்துள்ளார்.
இந்த முடக்கத்தைத் தொடர்ந்து, பல பயனர்கள் தங்கள் கோபத்தையும், வாட்ஸ்அப் உண்மையில் முடங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
இன்று காலையில் கூட, பல பயனர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பணம் செலுத்துவதில் சிரமங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வாட்ஸ்அப் முடங்கியுள்ளதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாட்ஸ்அப் நிறுவனம் இந்த பிரச்சனைக்கு எப்போது தீர்வு காணும் என்று பயனர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.