BLDC ஃபேன் என்றால் என்ன? வழக்கமான மின்விசிறிகளை விட இது ஏன் அதிக மின்சாரத்தை சேமிக்கிறது? இதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
காலம் மாறிப்போச்சு! முன்னரெல்லாம் வீட்டுல இருக்கிற எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் கரண்ட் பில்ல எகிற வைக்கும் ராட்சசர்களா இருந்தாங்க. ஆனா இப்ப எனர்ஜி எஃபிஷியன்ட் பொருட்கள் வந்த பிறகு அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமா குறையுது. இந்த வெயில்ல நீங்க ஃபேன் யூஸ் பண்றவங்களா இருந்தா, உங்களுக்கும் ஒரு சூப்பரான எனர்ஜி எஃபிஷியன்ட் ஆப்ஷன் வந்துடுச்சு! அதுதான் BLDC ஃபேன். சமீப காலமா இந்த ஃபேன் ரொம்ப பாப்புலராகிட்டு வருது. சாதாரண ஃபானை விட இது நிறைய மின்சாரத்தை சேமிக்குது, அதுமட்டுமில்லாம சில ஸ்மார்ட் ஃபீச்சர்ஸோடவும் வருது. அப்படி என்னதான் இந்த BLDC ஃபேன்ல ஸ்பெஷல்? வாங்க பார்க்கலாம்!
26
BLDC ஃபேன்ன்னா என்ன?
BLDCன்னா Brushless Direct Current Fanனு அர்த்தம். வழக்கமான ஃபேன்ல பிரஷ் இருக்கும், ஆனா இந்த ஃபேன்ல பிரஷ் இல்லாம எலக்ட்ரானிக் கண்ட்ரோலர் மூலமா மோட்டார் பவர் ஆகும். இதுல AC (Alternating Current) மோட்டாருக்கு பதிலா DC (Direct Current) மோட்டார் யூஸ் பண்றதால, இது சாதாரண ஃபானை விட ரொம்ப எனர்ஜி எஃபிஷியன்ட்டா இருக்கு. அதுமட்டுமில்லாம, இந்த DC மோட்டார் இருக்கறதால BLDC ஃபேன் ரொம்ப நாளைக்கு உழைக்கும், சீக்கிரமா பழுதாகாது.
36
மின்சார சிக்கனம் - இதுதான் ஹீரோ!
மின்சார பயன்பாட்டுல பார்த்தீங்கன்னா, ஒரு BLDC ஃபேன் வெறும் 24லிருந்து 25 வாட்ஸ் தான் எடுக்கும். ஆனா சாதாரண ஃபேன் 50லிருந்து 100 வாட்ஸ் வரைக்கும் இழுக்கும். ஒரு யூனிட் மின்சாரத்துல சாதாரண ஃபேன் 6.5லிருந்து 10 மணி நேரம் வரைக்கும் ஓடும், ஆனா ஒரு BLDC ஃபேன் அதே அளவு மின்சாரத்துல 25லிருந்து 28 மணி நேரம் வரைக்கும் ஓடும்னு சொன்னா நம்புவீங்களா? ஆமாங்க! சாதாரண ஃபானை விட BLDC ஃபேன் மூணு மடங்கு அதிகமா எனர்ஜி எஃபிஷியன்ட்!
மின்சாரத்தை சேமிக்கிறது மட்டுமில்லாம, BLDC ஃபேன் ரொம்ப அமைதியா வேலை செய்யும், அதே சமயத்துல நல்ல ஸ்பீடாவும் சுத்தும். சாதாரண ஃபேன்ல பிரஷ் உராய்றதால சத்தம் வரும், ஆனா BLDC டெக்னாலஜில அந்த பிரச்சனையே இல்ல. அதுமட்டுமில்லாம, இது இன்வெர்ட்டர் ஃபிரண்ட்லியாவும் இருக்கு. கரண்ட் கட் ஆனாலும் ரொம்ப நேரம் வரைக்கும் ஃபேன் ஓடும். இந்த ஃபேன்ல இருக்கற இன்னொரு ஸ்மார்ட் ஃபீச்சர் என்னன்னா, நீங்க கடைசியா வச்ச ஸ்பீடு, மோடு, லைட் கலர் எல்லாத்தையும் இது ஞாபகம் வச்சுக்கும். திரும்ப ஆன் பண்ணும் போது அப்படியே ஸ்டார்ட் ஆகும்!
56
BLDC ஃபேன் vs சாதாரண ஃபேன் - ஒரு ஒப்பீடு:
அம்சங்கள்
BLDC ஃபேன்
சாதாரணஃபேன்
மின்சார நுகர்வு
28–35 வாட்
50–100 வாட்
சராசரி ஆயுட்காலம்
7–10 வருடங்கள்
5-6 வருடங்கள்
சத்தத்தின் அளவு
மிகக் குறைவு (சுமார் 32 dB)
அதிகம்
இன்வெர்ட்டர் ஆதரவு
ஆம்
இல்லை
ஸ்மார்ட் அம்சங்கள்
ஆம்
இல்லை
விலை
₹ 3,000–₹ 7,000
₹ 1,200–₹ 1,800
66
விலை கொஞ்சம் அதிகமா இருந்தாலும், மின்சார சேமிப்பு, நீண்ட ஆயுட்காலம், அமைதியான செயல்பாடு, ஸ்மார்ட் ஃபீச்சர்ஸ்னு பார்க்கும்போது BLDC ஃபேன் நிச்சயம் ஒரு நல்ல முதலீடுதான்! உங்க வீட்டுக்கும் ஒரு எனர்ஜி எஃபிஷியன்ட் ஃபேன் வேணும்னா, BLDC ஃபேன் ஒரு சூப்பரான சாய்ஸா இருக்கும்!