மற்றொரு குறிப்பிடத்தக்க பேக் ரூ.3799 திட்டம், இதில் அமேசான் பிரைம் லைட் மற்றும் வி மூவிஸ் & டிவிக்கான ஒரு வருட சந்தா அடங்கும். இந்தத் திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு மற்றும் இரவு நேர வரம்பற்ற டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. வார இறுதி நாட்களில், பயன்படுத்தப்படாத டேட்டாவை எடுத்துச் செல்லலாம். போனஸாக, இந்த பேக்கில் 50 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டாவும் அடங்கும்.