ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி! 3 நாள் பேட்டரி லைஃப் தரும் விவோ T5 Pro - முழு லீக் விவரங்கள் உள்ளே!

Published : Apr 03, 2026, 08:00 AM IST

Vivo T5 Pro விவோ T5 Pro ஏப்ரலில் அறிமுகம்! 9020mAh பேட்டரி மற்றும் 144Hz டிஸ்ப்ளே என மிரட்டும் சிறப்பம்சங்கள். இதன் விலை மற்றும் வெளியீட்டு தேதி இதோ! b

PREV
13
Vivo T5 Pro

ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் விவோ நிறுவனம், அடுத்ததாக தனது 'டி' சீரிஸில் ஒரு அதிரடி மாற்றத்தை நிகழ்த்தத் தயாராகிவிட்டது. கடந்த ஆண்டு வெளியான விவோ T4 ப்ரோ மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த தலைமுறை பதிப்பான விவோ T5 ப்ரோ (Vivo T5 Pro) வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மத்தியில் வெளியீடு: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

டெக் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, விவோ T5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியில் (ஏப்ரல் 15-20 தேதிகளில்) அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கோடை காலத்தின் புதிய வரவாக அமையும் இந்த ஸ்மார்ட்போன், நடுத்தர விலைப்பிரிவில் (Mid-range segment) ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23
மிரட்டும் 9020mAh பேட்டரி: இனி சார்ஜிங் கவலை இல்லை!

இந்த போனின் மிக முக்கியமான சிறப்பம்சமே அதன் பிரம்மாண்டமான பேட்டரி தான். பொதுவாக ஸ்மார்ட்போன்களில் 5000mAh அல்லது 6000mAh பேட்டரிகளே இருக்கும் நிலையில், விவோ முதன்முறையாக 9,020mAh என்ற ராட்சத பேட்டரியை இதில் பொருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனுடன் 90W வேகமான சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம். இதனால் ஒருமுறை சார்ஜ் செய்தால் சாதாரண பயன்பாட்டிற்கு 3 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன்: கேமர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

விவோ T5 ப்ரோ 6.8 இன்ச் கொண்ட 1.5K AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) ஆகும். இது கேமிங் விளையாடும்போதும், வீடியோக்களைப் பார்க்கும்போதும் மிக மென்மையான அனுபவத்தைத் தரும். உள்ளே, Snapdragon 7s Gen 4 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால், மல்டி-டாஸ்கிங் மற்றும் அதிவேகச் செயல்திறனுக்குப் பஞ்சம் இருக்காது.

33
கேமரா மற்றும் சாப்ட்வேர் வசதிகள்

புகைப்பட ஆர்வலர்களுக்காக இதில் 50 மெகாபிக்சல் கொண்ட Sony IMX882 மெயின் கேமரா வழங்கப்படவுள்ளது. இது 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொண்டிருக்கும். செல்ஃபிக்காக 16MP முன்பக்க கேமரா இருக்கலாம். மேலும், இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS 6 இயங்குதளத்தில் செயல்படும் எனத் தெரிகிறது. தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க IP68 மற்றும் IP69 தரச்சான்றிதழ் (Rating) இதற்கு வழங்கப்பட்டுள்ளது கூடுதல் பலம்.

விலை எவ்வளவு இருக்கும்?

இந்தியாவில் இந்த விவோ T5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. Glacier Blue மற்றும் Cosmic Black ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories