வடிவமைப்பு மற்றும் உறுதித்தன்மை - கிரேடு-4 டைட்டானியம் பாடி (Grade 4 Titanium case) மற்றும் சபைர் கிரிஸ்டல் கிளாஸ் (Sapphire crystal glass) கொண்டு மிக உறுதியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 10 ATM நீர் எதிர்ப்புத் திறன் மற்றும் EN13319 டைவிங் சான்றிதழ் பெற்றுள்ளதால், தீவிர விளையாட்டு வீரர்களுக்கும் நீர் விளையாட்டுகளுக்கும் ஏற்றது.
டிஸ்ப்ளே - ஸ்மார்ட்வாட்ச்களிலேயே மிக பிரகாசமான 5,000 நிட்ஸ் உச்ச பிரகாசம் (Peak Brightness) கொண்ட 1.52-இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேரடி சூரிய ஒளியிலும் திரையைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
செயல்திறன் மற்றும் பேட்டரி - குவால்காம் ஸ்னாப்டிராகன் வெயர் எலைட் ஆப் மற்றும் 2GB RAM உடன் இயங்குகிறது. இதன் 800mAh பேட்டரி ஒருமுறை செய்தால் பல நாட்களுக்கு (சுமார் 60 முதல் 80 மணி நேரம் வரை) தடையின்றி உழைக்கக் கூடியது.
சிறப்பு அம்சங்கள் - டூயல்-பிரீக்வென்சி ஜிபிஎஸ் (Dual-frequency GPS), எமர்ஜென்சி சைரன் (86 டெசிபல் சத்தம்), தானியங்கி வீழ்ச்சி கண்டறிதல் (Fall Detection) மற்றும் மேம்பட்ட உடல்நலக் கண்காணிப்பு சென்சார்கள் உள்ளன.
25
சாம்சங் வாட்ச் 9
பயன்பாடு - அன்றாட உடல்நலம் மற்றும் உடற்தகுதியைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த மாடலாகும்.
செயல்திறன் மற்றும் பேட்டரி - ஸ்னாப்டிராகன் வெயர் எலைட் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுவதால் இதன் செயல்வேகம் மிக வேகமாக இருக்கும். இதில் உள்ள 390mAh பேட்டரி முந்தைய தலைமுறை மாடல்களைவிட கூடுதல் நேரம் தாக்குப் பிடிக்கும்.
உடல்நலக் கண்காணிப்பு - தூக்கத்தின் போது இதயத் துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு (SpO2), தோல் வெப்பநிலை மற்றும் சுவாச விகிதம் போன்ற முக்கிய உடல்நிலை மாற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் 'Vitals' வசதி இதில் உள்ளது.
ஏ.ஐ மற்றும் வாய்ஸ் ஆர்டர் - கூகுள் ஜெமினி (Google Gemini) ஒருங்கிணைப்புடன் வருவதால், கைபேசியைத் தொடாமலேயே குரல் கட்டளைகள் மூலம் பல வேலைகளை எளிதாகச் செய்ய முடியும்.
35
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக்
வடிவமைப்பு - சாம்சங் வாட்ச்களின் பாரம்பரியமான பிரீமியம் தோற்றத்தைத் தரும் சுழலும் பெசெல் (Rotating Bezel) வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் - கைக்கடிகாரத்தை எளிதாக இயக்க இந்த சுழலும் பெசெல் பெரிதும் உதவுகிறது. ஏ.ஐ அடிப்படையிலான உடற்தகுதி வழிகாட்டுதல்கள் (AI Fitness Guidance) மற்றும் 2 நாட்களுக்கும் மேல் நீடிக்கும் நம்பகமான பேட்டரி பேக்கப் இதன் பலமாகும்.
பயன்பாடு - இலகுவான உடல் அமைப்பு மற்றும் நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டுள்ளதால், அலுவலகப் பயன்பாட்டிற்கும் தீவிர உடற்பயிற்சிக்கும் இது மிகவும் ஏற்றது.
சிறப்பம்சங்கள் - பல்துறை உடற்தகுதி கண்காணிப்பு (Multi-sport tracking), துல்லியமான இதயத் துடிப்பு சென்சார் மற்றும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட் அறிவிப்புகள் போன்ற வசிகளைக் கொண்டுள்ளது.
55
சாம்சங் வாட்ச் எஃப்இ (FE)
பட்ஜெட் நட்பு மாடல் - சாம்சங் வாட்ச்களின் முக்கிய உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த அம்சங்களை மிகக் குறைந்த விலையில் பெற விரும்பும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த பட்ஜெட் மாடலாகும்.
சிறப்பம்சங்கள் - தினசரி உடற்பயிற்சி கண்காணிப்பு, தூக்கத் தரம் மற்றும் ஸ்டைலான தோற்றத்தை சமமான விலையில் வழங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.