நாமதான் டெக்னாலஜியை பயன்படுத்துறோம்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, செல்போன் மாதிரி, செயற்கை நுண்ணறிவு (AI) நம்மள பயன்படுத்த ஆரம்பிச்சா என்ன ஆகும்? இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
சதித்திட்டம் தீட்டுவது, பழிவாங்குவது, யாருக்கும் புரியாத மொழியில் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க் அமைத்து பேசிக்கொள்வது... இதெல்லாம் யார் செய்வார்கள்? தீவிரவாதிகள் என்றுதானே நினைப்போம்? ஆனால், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திரங்கள் இந்த வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளன. இப்போதைக்கு இது மிகச் சிறிய அளவில்தான் நடக்கிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடும் என்கிறார்கள் நிபுணர்கள். மனிதனை விட புத்திசாலியான, மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயந்திரங்களை AI-களே உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டனவாம். ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பார்ப்பது போல இருந்தாலும், இதுதான் நிஜம்.
24
இப்போது எல்லோரும் பத்திரிகையாளர்கள்தான்...
முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டும், சென்சார் இருந்தது. இப்போது ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லாம் கைக்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, மைக்கை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்கலாம். ஒரு பூங்காவில், ஒரு தம்பதி தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். 3 வயது குழந்தை வீட்டுக்குப் போக வேண்டும் என்று அழுகிறது. அப்போது இரண்டு யூடியூபர்கள் வந்து, 'நீங்க குழந்த கடத்தல் கும்பலா?' என்று மிரட்டுகிறார்கள். ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் காட்டச் சொல்லி அதட்டுகிறார்கள். இது இன்னும் நடக்கவில்லை, ஆனால் அரசுகள் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், இது போன்ற பல சம்பவங்கள் நிச்சயம் நடக்கும்.
34
செயற்கை நுண்ணறிவை அரசுகள் கட்டுப்படுத்துமா?
ஒரு யூடியூப் சேனல் தொடங்க எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால், அதன் பெயரில் மக்களை பிளாக்மெயில் செய்தால் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலையில், அரசுகள் AI-ஐ கட்டுப்படுத்தும் என எப்படி நம்புவது? சமீபத்தில், சீனாவில் இருந்து வாங்கிய ஒரு ரோபோ நாயை, தங்களது சொந்தக் கண்டுபிடிப்பு என்று ஒரு தனியார் பல்கலைக்கழகம் கூறி விளம்பரம் செய்தது. ஒரு தனிநபர் அல்ல, ஒரு பல்கலைக்கழகமே இப்படிச் செய்கிறது! 2050-க்குள் பல வேலைகள் இருக்காது என்கிறார்கள். அப்படி வேலை இல்லையென்றால் மக்கள் எப்படி வாழ்வார்கள்? AI எல்லா வேலையையும் செய்தால், மக்களுக்கு வருமானம் இருக்காது. அப்போது பொருட்களை யார் வாங்குவார்கள்? ரோபோக்களைத் தயாரித்த கோடீஸ்வரர்கள் இலவசமாகப் பொருட்களைக் கொடுப்பார்களா? இதெல்லாம் சாதாரண மக்களுக்குப் புரியாது.
மீடியாவில் வரும் பல செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. தங்கம் விலை சிறிது குறைந்தால், 'குப்பையென சரிந்தது' என தலைப்பு வைப்பார்கள். பல உண்மைகள் நமக்குத் தெரிவதே இல்லை. மீடியாவில் வருவதை நம்பி வாழ்கிறோம். சிறிய விஷயங்களிலேயே இப்படி என்றால், உலகப் பணக்காரர்களின் AI தொழில்நுட்பத்தை அரசுகள் மக்கள் நலனுக்காகக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்ப்பது பேராசை. மனிதன்தான் டெக்னாலஜியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், டெக்னாலஜி நம்மைப் பயன்படுத்த ஆரம்பித்தால்? அது அதோகதிதான். இப்போது எத்தனை பேர் மொபைல் போனைப் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேரை மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது? இதுதான் வித்தியாசம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.