Reliance Jio Launches 2025 New Year Welcome Plan Benefits
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய 2025 ரூபாய் திட்டம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஜியோவுடன் இணைந்த இணையதளங்களில் இருந்து ரூ.2,150 மதிப்பிலான பலன்களை அளிக்கும் வவுச்சர்கள் மற்றும் கூப்பன்களையும் இலவசமாகப் பெறலாம் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.
Jio 2025 New Year Plan Validity
ரிலையன்ஸ் ஜியோவின் நியூ இயர் வெல்கம் பிளான் (Reliance Jio New Year Welcome Plan) ரூ.2025க்கு கிடைக்கிறது. இது 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்டு திட்டம் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 5G இன்டர்நெட் சேவையை வரம்பில்லாமல் பயன்படுத்தலாம். போன் கால்களும் முற்றிலும் இலவசம்.
Reliance Jio New Year Welcome Plan Coupons and Vouchers
ஆனால், 4G டேட்டாவைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2.5 GB மட்டும்தான் கிடைக்கும். மொத்தமாக 200 நாட்களில் 500 GB கிடைக்கிறது. தினமும் 2.5 GB டேட்டாவுடன் கூடிய பிளானில் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்துடன் வேலிடிட்டி காலம் முழுவதும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம்.
Reliance Jio 2025 New Year Welcome Plan Last Date
இந்தத் திட்டம் ஜனவரி 11, 2025 வரை கிடைக்கும். இந்தக் காலத்திற்குள் 2025 க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ரூ.468 சேமிக்க முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது.
Jio New Year Welcome Plan
மேலும், Ajio தளத்தில் குறைந்தபட்சம் ரூ.2,500க்கு ஷாப்பிங் செய்யும்போது ரூ.500 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் கிடைக்கிறது. Swiggy இல் குறைந்தபட்சம் ரூ.499 க்கு ஆர்டர் செய்தால் ரூ.150 தள்ளுபடி பெறுவதற்கான வவுச்சரும் கிடைக்கும். Easemytrip.com இன மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தில் விமான முன்பதிவு செய்ய ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கும் கூப்பனும் இந்த ரீசாரஜுடன் இலவசமாகத் தரப்படுகிறது. இந்த கூப்பன்களை MyJio மொபைல் அப்ளிகேஷன் மூலம் பெறலாம்.
Reliance Jio New Year Offer
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து, வழங்கியுள்ள குறிப்பிடத்தக்க சலுகை இது. 2024 ஜூலை மாதம், ஜியோவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.
Reliance Jio Mukesh Ambani
கட்டண உயர்வு அமலுக்கு வந்த அதே நேரத்தில் கூடுதல் கட்டணமின்றி 5G சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. ஜியோவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல், வி (வோடபோன் ஐடியா) தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திவிட்டன.Reliance Jio Mukesh Ambani