ஹெவி கேமிங் பிரியரா? உங்களுக்காக வெறித்தனமான ஸ்மார்ட்போன் இதுதான்!

First Published | Dec 9, 2024, 11:46 PM IST

நீங்கள் ஒரு சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. ரூ. 20,000 க்கும் குறைவான பட்ஜெட்டில் சூப்பரான ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Gaming Smartphones Under Rs 20,000

நீங்கள் ஒரு சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. ரூ. 20,000 க்கும் குறைவான பட்ஜெட்டில் சூப்பரான ஸ்மார்ட்போன் கிடைக்கும். பிரபல நிறுவனங்கள் மொபைல் விளையாட்டுகளுக்காகவே சிறந்த ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளன.

Best Gaming Smartphones

கேமிங் ஸ்மார்ட்போன் என்றால் பெரிய டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த பேட்டரி லைஃப் ஆகியவை மிகவும் அவசியம். இதனால் நீங்கள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து விளையாட முடியும். இந்த வகையில் மோட்டோரோலா, ரெட்மீ, iQOO, நத்திங் போன்ற பிரபல பிராண்டுகளிலிருந்து சிறந்த கேமிங் ஃபோன்கள் உள்ளன. அவற்றில் அதுவும் 20,000 ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில்!

Tap to resize

Moto Edge 50 Neo

மோட்டோ எட்ஜ் 50 நியோ (Moto Edge 50 Neo) ஸ்மார்ட்போன் ரூ.21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போனை Flipkart வழியாக வாங்கினால் ரூ.19,999 முதல் கிடைக்கும். இந்த போன் MediaTek Dimensity 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறம் உள்ள ட்ரிபிள் கேமரா அமைப்பு இதன் இன்னொரு ஹைலைட்.

iQOO Z9

அமேசான் (Amazon) தளத்தில் iQOO Z9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,498 மட்டுமே. இது MediaTek Dimensity 7200 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. துல்லியமான காட்சிகளைப் பதிவுசெய்யும் 50MP Sony IMX882 OIS கேமராவைக் கொண்டுள்ளது. 4K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது. விரைவான செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Nothing Phone 2a

நத்திங் நிறுவனத்தின் Nothing Phone 2a ஸ்மார்ட்போன் தற்போது Flipkart இல் 23,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. ஆனால், ரூ.3,000 வங்கி தள்ளுபடிக்குப் பிறகு ரூ.20,999 மட்டும் செலுத்தி வாங்கலாம். இந்த மொபைல் MediaTek Dimensity 7200 சிம்செட் மூலம் இயங்குகிறது. பெரிய 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. நீட்டித்து உழைக்கும் 5000mAh பேட்டரியும் இருக்கிறது. இரண்டு 50MP ரியர் கேமராக்களுடன் வருகிறது.

Redmi Note 13 Pro

ரெட்மீ நிறுவனம் கொண்டுவந்துள்ள Redmi Note 13 Pro இன்னொரு சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன். அமேசான் தளத்தில் இதன் விலை ரூ.18,250. Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயங்கும் இது 1.5K பிக்சல் தெளிவு கொண்ட பெரிய 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டது. இதில் டால்பி விஷன் அம்சத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பும் உள்ளது.

Latest Videos

click me!