ஒன்பிளஸ் 13 சீரிஸ் அதகளம்! 6000 mAh பக்கா பேட்டரியுடன் சூப்பர் பவர் ஸ்மார்ட்போன்!

First Published | Jan 8, 2025, 7:09 PM IST

OnePlus 13, OnePlus 13R launched in India: ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான OnePlus 13 மற்றும் OnePlus 13R-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் மற்றும் புதிய அம்சங்களுடன் வருகின்றன.

OnePlus 13, OnePlus 13R

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, OnePlus தனது புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. OnePlus 13 மற்றும் OnePlus 13R இரண்டும் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இவை புதிய கவர்ச்சியான வடிவமைப்பு, குறிப்பிடத்தக்க ஹார்டுவேர் அப்டேட் மற்றும் பல புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளன.

OnePlus 13 Smartphones

நீங்கள் நவீன வசதிகளுடன் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவை சரியான தேர்வாக இருக்கும். வாங்குபவர்கள் தங்கள் பட்ஜெட்டின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்த மொபைலைத் தேர்வு செய்யலாம். புதிய OnePlus 13 சீரிஸ் மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Tap to resize

OnePlus 13 price

OnePlus 13 ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் QHD+ ProXDR LTPO டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் மூலம் இயங்குகிறது. 24GB வரை RAM மற்றும் 1TB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. 6000mAh பேட்டரி கொண்ட இதில் 100W SUPERVOOC சார்ஜிங் மற்றும் 50W AIRVOOC சார்ஜிங் வசதியும் உள்ளது.

OnePlus 13R specs

புகைப்படம் எடுப்பதற்காக, OnePlus 13 மொபைலில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கிறது. இது Sony LYT-808 சென்சார் கொண்ட 50MP பிரைமரி கேமரா, Sony LYT-600 சென்சார் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைக் கொண்டது. முன்பக்கத்தில், 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 இல் செயல்படுகிறது.

OnePlus 13 launch in India

OnePlus 13R ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ProXDR LTPO டிஸ்ப்ளேயுடன் கிடைக்கும். இது 16GB வரை RAM மற்றும் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் இருக்கிறது. சோனி LYT-700 சென்சார் கொண்ட 50MP பிரைமரி கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. 80W SUPERVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6000mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

OnePlus 13

OnePlus 13 மொபைலின் 12GB + 256GB வேரியண்ட் ரூ.69999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. இது ஆர்க்டிக் டான், பிளாக் எக்லிப்ஸ் மற்றும் மிட்நைட் ஓஷன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். அதேசமயம், OnePlus 13R ஆனது 12GB + 256GB வேரியண்ட் ரூ.42999 ஆரம்ப விலையில் கிடைக்கும். இது ஆஸ்ட்ரல் டிரெயில் மற்றும் நெபுலா நொயர் வண்ணங்களில் உள்ளது. ஒன்பிளஸ் 13க்கான விற்பனை ஜனவரி 10ஆம் தேதியும், ஒன்பிளஸ் 13ஆர் விற்பனை ஜனவரி 13ஆம் தேதியும் தொடங்குகிறது.

Latest Videos

click me!