CMF Phone 1 பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையைக் குறிவைத்து அறிமுகமாகியுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், பின்புற கவர்களை மாற்றும் வசதி. இது பயனர்கள் தொலைபேசியின் தோற்றத்தை விருப்பம் போல மாற்றிக்க்கொள்ள அனுமதிக்கிறது. இது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் மிகவும் அரிய அம்சமாகும். MediaTek Dimensity 7300 பிராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த மொபைல், அன்றாட பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கும் ஈடுகொடுக்கிறது.
6.67-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வீடியோக்களைப் பார்ப்பதற்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. 50MP பிரதான கேமரா கொண்ட இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் தாங்கும் செயல்திறனை உறுதி செய்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 இல் இயங்குகிறது.