ஐபோன் SE 4 ரிலீஸ் தேதி நெருங்கிருச்சு! டிம் குக் கொடுத்த அப்டேட்!

Published : Feb 15, 2025, 05:04 PM ISTUpdated : Feb 15, 2025, 05:21 PM IST

ஆப்பிள் நிறுவனம் பிப்ரவரி 19ஆம் தேதி தனது சமீபத்திய தயாரிப்புகளை வெளியிட உள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் SE 4 மற்றும் M4 மேக்புக் ஏர் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபேட்கள் மற்றும் விஷன் ப்ரோவிற்கான அப்டேட்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

PREV
16
ஐபோன் SE 4 ரிலீஸ் தேதி நெருங்கிருச்சு! டிம் குக் கொடுத்த அப்டேட்!
iPhone SE 4 price

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. வரும் புதன்கிழமை, பிப்ரவரி 19 அன்று அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இதுபற்றி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறார். "குடும்பத்தின் புதிய உறுப்பினரை சந்திக்க தயாராகுங்கள்" என்ற செய்தியுடன், அனிமேஷன் செய்யப்பட்ட ஆப்பிள் லோகோவைப் பதிவிட்டுள்ளார்.

26
iPhone SE 4 update

பிப்ரவரி 19ஆம் தேதி நிகழ்வில் என்ன விற்பனைக்கு வரவுள்ளது என்பதை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட iPhone SE 4, MacBook Air, iPad மற்றும் Vision Pro ஹெட்செட் ஆகியவற்றின் புதிய பதிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

36
iPhone SE 4 launch

பிப்ரவரி 19ஆம் தேதி நிகழ்ச்சியின் நட்சத்திரமாக ஐபோன் SE 4 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் மலிவு விலையில் கிடைக்கும் ஐபோன் SE சீரிஸில் மார்ச் 2022 க்குப் பிறகு புதிய மாடல் வெளிவரவில்லை. இந்த முறை, இந்த iPhone SE பெரிய மறுவடிவமைப்புடன் அறிமுகமாகும் என்று தகவல் பரவியுள்ளது. ஐபோன் 14 போன்ற பளபளப்பான தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று இதுவரை கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

46
iPhone SE 4 Features

ஃபேஸ் ஐடி அம்சமும் புதிய iPhone SE 4 ஸ்மார்ட்போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் USB-C போர்ட்டையும் வழங்கப்படலாம். அதன் மூலம் ஆப்பிள் தனது லைட்னிங் கனெக்டருக்கு முழுமையாக விடைகொடுப்பது உறுதியாகும். ஐபோன் SE 4 A18 சிப் அல்லது A17 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும் என்றும் 8GB RAM மற்றும் 128GB மெமரியுடன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஹார்டுவேர் அம்சங்களை வைத்து, இதில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் AI அம்சங்களும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

56
MacBook Air with M4 chip

பிப்ரவரி 19ஆம் தேதி நிகழ்ச்சியில் ஐபோன் SE 4 தவிர M4 சிப்பைக் கொண்ட புதிய மேக்புக் ஏர் வெளியீட்டுக்கும் வாய்ப்பு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த லேப்டாப் 16 GB RAM உடன் ரிலீஸுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது ஆப்பிள் மேக்புக் வரிசையில் செய்த சமீபத்திய அப்டேட்டுகளைப் பின்பற்றியதாக இருக்கிறது. ஆனால், வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.  ஆனால், M4 சிப் மூலம் மேம்பட்ட செயல்திறன் உறுதிசெய்யப்படும் என்று தெரிகிறது.

66
iPad Air

அடுத்ததாக, ஐபேட் வரிசையும் புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபேட் ஏர் மற்றும் என்ட்ரி-லெவல் ஐபேட் இரண்டிற்கும் அப்டேட்டுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஐபேட் ஏர் M3 சிப் மூலம் மேம்படுத்தப்படலாம். அதே நேரத்தில் பேசிக் மாடலில் A16 அல்லது A17 ப்ரோ சிப் இடம்பெறலாம். இது தவிர ஐபேட்களில் வேறு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories