புது ஐபோனுடன் காதலர் தினம் கொண்டாடுங்க! டக்கரான ஆஃபர் கொடுக்கும் பிளிப்கார்ட்!

Published : Feb 12, 2025, 08:47 PM ISTUpdated : Feb 12, 2025, 08:57 PM IST

Flipkart Valentine's Day Sale 2025: காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆப்பிள் ஐபோன்கள் இப்போது மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு ஆப்பிள் ஐபோனை பரிசளிக்க விரும்பினால், இப்போதே ஆர்டர் செய்யுங்கள்.

PREV
15
புது ஐபோனுடன் காதலர் தினம் கொண்டாடுங்க! டக்கரான ஆஃபர் கொடுக்கும் பிளிப்கார்ட்!
Flipkart Valentine's Day Sale 2025

காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆப்பிள் ஐபோன்கள் இப்போது மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவையும் குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு ஆப்பிள் ஐபோனை பரிசளிக்க விரும்பினால், இப்போதே ஆர்டர் செய்யுங்கள்.

25
Apple iPhone Offers

கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் இரண்டும் ஆப்பிளின் A18 பயோனிக் சிப்செட்டில் இயங்குகின்றன, அவற்றின் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் மட்டுமே வித்தியாசம். ஐபோன் 16 6.1-இன்ச் 60Hz OLED பேனலைக் கொண்டுள்ளது, அதேசமயம் பிளஸ் வேரியண்டில் மிகப் பெரிய 6.7-இன்ச் 60Hz OLED டிஸ்ப்ளே உள்ளது.

இந்த போன்களின் பின்புறம் 48MP முதன்மை சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்ட இரண்டு சகேமராக்களைக் கொண்டுள்ளது. ஆப்பிள் இன்டலிஜென்ஸ் ஆதரவுடன் 512GB வரை மெமரி ஆப்ஷனும் உள்ளது.

35
iPhone 16 and iPhone 16 Plus

ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக பேட்டரி திறன்களை வெளியிடுவதில்லை. ஆனால், ஐபோன் 16 3,561mAh பேட்டரி கொண்டது, ஐபோன் 16 பிளஸ் 4,674mAh பேட்டரியைக் கொண்டது எனக் கூறப்படுகிறது. இரண்டும் 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

இப்போது ஐபோன் 16 ரூ.68,999க்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. சற்று பெரிய பேட்டரி கொண்ட ஐபோன் 16 பிளஸ் ரூ.78,999 முதல் விற்பனைக்கு உள்ளது.

45
iPhone 15 and iPhone 15 Plus

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. புதிய மாடல்களைப் போலவே, இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவற்றின் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் மட்டுமே.

இரண்டு போன்களும் A17 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகின்றன. 48MP பிரைமரி லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கின்றன.

இவற்றில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சம் கிடையாது. நீங்கள் AI அம்சங்களைப் பயன்படுத்த விரும்பினால், புதிய ஐபோன்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் தற்போது ரூ.64,999க்கு விற்கப்படுகின்றன, உங்களிடம் பட்ஜெட் குறைவாக இருந்தால் மட்டும் ஐபோன் 15ஐ வாங்கலாம். ரூ.68,999 க்குக் கிடைக்கும் ஐபோன் 15 பிளஸ் வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும்.

55
iPhone 14

2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14, A15 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது. இது சற்று பழைய மாடல் ஐபோன் என்றாலும், இதில் உள்ள சிப்செட் அன்றாடப் பணிகள் எதையும் எளிதாகக் கையாள முடியும்.

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 போலவே, இதுவும் 6.1-இன்ச் 60Hz OLED திரையைக் கொண்டுள்ளது. இது ஒரே கையால் எளிதாகப் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. ஐபோன் 14 இல் 12MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. நீங்கள் அதிக செலவு செய்யாமல் ஐபோன் வாங்க நினைத்தால், ரூ.53,999க்கு கிடைக்கும் ஐபோன் 14 நல்ல சாய்ஸ் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories