வைஃபை அழைப்பை எப்படி இயக்குவது?
இந்த அம்சம் உங்கள் மொபைலில் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி அதை இயக்கலாம்:
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வைஃபை அழைப்பை இயக்குவதற்கான படிகள்:
படி 1: உங்கள் ஸ்மார்ட்போனின் அமைப்புகளை ஓபன் செய்யவும்.
படி 2: நெட்வொர்க் மற்றும் இணைய அமைப்புகளுக்குச் செல்லவும்.
படி 3: சிம் கார்டு & மொபைல் நெட்வொர்க் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4: நீங்கள் அழைக்கும் சிம் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 5: கீழே ஸ்க்ரோல் செய்து WiFi அழைப்பு ஆப்ஷனைக் கண்டறியவும்.
படி 6: வைஃபை அழைப்பை இயக்கவும்.
அவ்வளவுதான்! இதற்குப் பிறகு, உங்கள் தொலைபேசியின் மொபைல் நெட்வொர்க் பலவீனமாக இருக்கும்போது அல்லது கிடைக்காத போதெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போன் WiFi வழியாக அழைப்புகளைச் செய்யத் தொடங்கும்.