வேற லெவல் டிசைனில் ஐபோன் 17 ப்ரோ! அதகளமான அப்டேட்டுடன் 2025 இல் ரிலீஸ்!

First Published | Dec 30, 2024, 11:28 PM IST

iPhone 17 Pro design change: ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் முன் மற்றும் பின்புற பேனலுக்கான வடிவமைப்பு பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ப்ரோ வேரியண்ட்களில் இந்த டிசைன் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

iPhone 17 Pro

ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் இருக்கும் அப்டேட்டுகள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் ஐபோன்களின் செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

iPhone 17 Pro update

இப்போது, ​​ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் முன் மற்றும் பின்புற பேனலுக்கான வடிவமைப்பு பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ப்ரோ வேரியண்ட்களில் இந்த டிசைன் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Tap to resize

iPhone 17 Pro design change

கூகுள் பிக்சல் 9 ப்ரோ மாடல்களைப் போல புதிய கேமரா மாட்யூல் வடிவமைப்புடன் ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. எப்படி இருந்தாலும் ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றத்துடன் ஐபோன் 17 ப்ரோ மொபைல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

iPhone 17 Pro panels

இந்நிலையில், ஐபோன் 17 ப்ரோ மாடலின் ரெண்டர் படங்கள் கசிந்துள்ளன. அதில் புதிய கேமரா அமைப்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. முந்தைய மாடல்களைப் போலவே கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கேமரா அமைப்பு அலுமினியத்தால் ஆனதாக இருக்கும் என்று தெரிகிறது. இது தவிர, பின்புற பேனலின் எஞ்சிய பகுதி கண்ணாடியால் ஆனதாக இருக்கும்.

iPhone 17 Pro camera update

ஐபோன் 17 ப்ரோ மாடலின் முன்பக்கக் காட்சியில் புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை ஆப்பிள் கொண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே, வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் இருப்பது உறுதி எனச் சொல்கிறார்கள். 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வருகின்றன.

iPhone 17 Pro latest news

ஐபோன் 17 ப்ரோ மாடலின் முன்பக்கக் காட்சியில் புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை ஆப்பிள் கொண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே, வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் இருப்பது உறுதி எனச் சொல்கிறார்கள். 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வருகின்றன.

iPhone 17 Pro Launch date

புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்திற்கான லென்ஸ்கள் வழக்கத்தை விட குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்ளும். இதற்காக ஆப்டிகல் லென்ஸின் ஒரு வகை மெட்டலன்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஐபோன் 17 குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவல்களை எல்லாம் உறுதிப்படுத்த, இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

Latest Videos

click me!