போலி சீலுடன் ரெடியாகும் டூப்ளிகேட் ஐபோன் 16! ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க!

First Published Sep 14, 2024, 1:22 PM IST

ஐபோன் 16 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்குவது ஒரிஜினலா டூப்ளிகேட்டா என கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

iPhone 16 Pro models with Fake Seal

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் க்ளோடைம் நிகழ்ச்சியில் செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. iPhone 16 Pro மாடல்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஆர்டர்களுக்கான டெலிவரி செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கும்.

iPhone 16 Pro sales

தற்போதைய நிலவரப்படி, iPhone 16 Pro மற்றும் Pro Max ஆகியவை உலகில் எங்கும் வாங்க முடியாது. செப்டம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகுதான் ஐபோன் 16 மொபைல்களை பெற முடியும். இந்த மொபைல்களின் விற்பனையைத் தொடங்க வாடிக்கையாளர்களைப் போலவே விற்பனையாளர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு மோசடி செய்பவர்களும் ஐபோன் ரசிகர்களை ஏமாற்ற ரெடியாகிவிட்டனர்.

Latest Videos


iPhone 16 Pro Price

மோசடி பேர்வழிகள் ஐபோன் 16 டூப்ளிகேட் போன்களை விற்க ரெடியாகி வருவதை இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ ஒன்று அம்பலப்படுத்தி இருக்கிறது. வைரலாகியுள்ள இந்த வீடியோவில், iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max மொபைல்களுக்கான போலி முத்திரைகள் காட்டப்படுகின்றன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாக்ஸ் திறக்கப்பட்ட போன்களை மீண்டும் பேக் செய்து அதிக விலைக்கு விற்க மோசடி கும்பல் தயாராக உள்ளது. இதற்காக போலியான முத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. அவை அசல் ஆப்பிள் முத்திரையைப் போலவே இருக்கும். எனவே ஐபோன் வாங்குபவர்கள் ஒரிஜினல் ஆப்பிள் ஐபோன் சீல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

iPhone 16 Pro models

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் ஐபோன் ப்ரோ மாடல்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து இந்தியாவில் நல்ல லாபத்துடன் விற்கிறார்கள். வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் ஓரிஜனலா என்பதை அறிந்துகொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.

iPhone 16 Pro Warranty Coverage

https://checkcoverage.apple.com/ என்ற இணைய முகவரிக்குச் சென்று வாங்கிய தேதியைக் கண்டறியலாம். வாடிக்கையாளருக்கான வாரண்டி கவரேஜ் முடிவடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கொள்முதல் தேதி இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கவரேஜ் முடிவடையும் தேதி செப்டம்பர் 13, 2025 என்றால், மொபைல் கொள்முதல் செய்த தேதி செப்டம்பர் 13, 2024.

ஐபோன் பயனர்கள் தங்கள் மொபைலிலேயே வாரண்டியை சரிபார்க்கலாம். செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, அதில் உள்ள 'General' என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும். பிறகு About என்ற பகுதியில் ஸ்க்ரோல் செய்து பார்த்தால், கீழே ஐபோனுக்கான வாரண்டி  கவரேஜ் முடியும் தேதியைக் காணலாம்.

click me!