iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

First Published | Jun 6, 2023, 4:46 PM IST

ஆப்பிள் ஐபோன் 11 இன்னும் பல ஈ-காமர்ஸ் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 ரூ.32,049 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 11 2020 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இது இதுவரை மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும். ஆப்பிள் ஐபோன் 11 ஆனது ஆப்பிள் ஐபோன் 14 தொடரின் அறிமுகத்துடன் உற்பத்தியாளர் கைவிட்ட போதிலும், சிறந்த கேமரா மற்றும் சூப்பரான செயல்திறன் கொண்ட டீசென்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஐபோன் 11 சீரிஸில், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும். ஆப்பிள் ஐபோன் 11, 2019 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஆரம்ப விலை ரூ.64,900 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.32,049 குறைக்கப்பட்டு வெறும் ரூ.8,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tap to resize

ஆப்பிள் ஐபோன் 11 மொபைல் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி டிஸ்ப்ளே A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் இரட்டை 12எம்பி சென்சார்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக முன்பக்கத்தில் 12எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 11 இன் விலை ரூ.2,901 குறைக்கப்பட்டு ரூ.40,999 ஆக உள்ளது.

கூடுதலாக, Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 5% கேஷ்பேக்கைப் பெறலாம். இது ஸ்மார்ட்போனின் விலையை ரூ.38,950 ஆகக் குறைக்கிறது. மேலும், Flipkart உங்களின் பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ.30,000 வரை திரும்ப வழங்கும்.

ரூ.32,049 குறைப்புக்குப் பிறகு, நீங்கள் ஆப்பிள் ஐபோன் 11 ஐ பிளிப்கார்ட்டில் இருந்து வெறும் ரூ.8,950க்கு பெறலாம். உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும், ஆப்பிள் ஐபோன் 11 இன்னும் பல ஈ-காமர்ஸ் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

இதையும் படிங்க..புது ஸ்டைலில்.. மாஸாக களமிறங்கும் ஓப்போ ரெனோ 10 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!