பாதி விலையில் சினிமா பிளஸ் ஓடிடி பிளான்! பிஎஸ்என்எஸ் வழங்கும் புதிய் ஆஃபர்!

Published : May 17, 2023, 09:46 PM IST

பிஎஸ்என்ல் (BSNL) நிறுவனம் தனது ஃபைபர் சேவை வாடிக்கையாளர்லகளுக்கு மூன்று விதமான சினிமாபிளிஸ் ஓடிடி (Cinemaplus OTT) பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

PREV
15
பாதி விலையில் சினிமா பிளஸ் ஓடிடி பிளான்! பிஎஸ்என்எஸ் வழங்கும் புதிய் ஆஃபர்!
பிஎஸ்என்எல் ஓடிடி

பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக சினிமா ப்ளஸ் என்ற புதிய ஓடிடி சேவையை அறிவித்துள்ளது. இந்த புதிய பேக்கேஜ்கள் மூலம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டு மகிழலாம்.

25
சினிமாபிளஸ்

சினிமா பிளஸ் என்ற பெயரில் Lionsgate, ShemarooMe, Hungama மற்றும் EpicOn போன்ற பல ஓடிடி தளங்கள் கொண்ட பேக்குகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது. ஏற்கெனவே ரூ.249 விலையில் வழங்கிவந்த YuppTV பேக்கை தான் சினிமா பிளஸ் என்று பெயர் மாற்றம் செய்து அறிமுகப்படுத்துகிறது. சினிமா பிளஸ் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய பலவிதமான திட்டங்கள் உள்ளன.

35
ரூ. 49 முதல்...

சினிமா ப்ளஸ் பிளான்கள் ரூ. 49ல் தொடங்கி ரூ.249 வரை செல்கிறது. பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் ஸ்டார்டர் பேக், பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் ஃபுல் பேக், பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் ப்ரீமியம் பேக் என மூன்று பேக்குகள் உள்ளன. இவ்ற்றில் ஒவ்வொன்றும் என்னென்ன வழங்குகின்றன என்பது பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

45
3 விதமான திட்டங்கள்

ரூ.49 விலையுள்ள பேசிக் பேக்கில் ShemarooMe, Hungama, Lionsgate மற்றும் EpicOn ஆகியவற்றைப் பெறலாம். இதன் விலை முன்பு ரூ.99 ஆக இருந்தது. இப்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஃபுல் பேக்கில் Zee4 பிரீமியம், SonyLiv பிரீமியம் YuppTV மற்றும் Hotstar ஆகியவை அடங்கும். இதன் விலை 199 ரூபாய். பிரீமியம் பேக் Zee5 பிரீமியம், SonyLiv பிரீமியம், YuppTV, ShemarooMe, Hungama, Lionsgate மற்றும் Hotstar ஆகியவற்றை வழங்குகிறது. இதன் விலை ரூ.249.

55
பிஎஸ்என்எல் எண் தேவை

சினிமாபிளஸ் பேக் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்படும். எனவே, சினிமாப்ளஸ் பேக்குகளை பயன்படுத்த பிஎன்என்எஸ் ஃபைபர் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். அதில் தங்கள் தேவைக்கேற்ப ஒரு பேக்கை பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories