ஆப்பிள் நிகழ்வு:
ஆப்பிளின் வருடாந்திர நிகழ்வு - உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2025 - ஜூன் மாதம் நடைபெற உள்ளது. நேற்று இரவு, இந்த நிகழ்வு ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. ஆனால், வரவிருக்கும் அறிவிப்புகளை ஆப்பிள் வெளிப்படையாக வெளியிடவில்லை என்றாலும், iOS 19, புதிய ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் பல சாப்ட்வேர் அப்டேட்டுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.