Cheap and Best Phones : வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் நல்ல பேட்டரி, FM ரேடியோ, UPI வசதியுடன் ஒரு கீபேட் போன் தேடுகிறீர்களா? மார்க்கெட்டில் கிடைக்கும் டாப் 5 ஃபீச்சர் போன்களின் லிஸ்ட் இதோ.
ஸ்மார்ட்போன் காலத்திலும் கீபேட் போன்களுக்கான மவுசு குறையவே இல்லை. பெரியவர்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும், அல்லது செகண்டரி போனாகப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இன்றும் ஃபீச்சர் போன்களைத்தான் விரும்புகிறார்கள். நீங்களும் ரூ.1000 பட்ஜெட்டில் ஒரு நல்ல ஃபீச்சர் போன் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்காகவே நீண்ட பேட்டரி பேக்கப், FM ரேடியோ, டார்ச் லைட், ஏன் UPI வசதியுடன் வரும் 5 சிறந்த போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
26
1. நோக்கியா 105 கிளாசிக் (Nokia 105 Classic)
நோக்கியா பிராண்டின் தரம் பற்றி எல்லோருக்கும் தெரியும். பட்ஜெட் விலையில் ஒரு நம்பிக்கையான போன் வேண்டுமென்றால் இது ஒரு சூப்பர் சாய்ஸ். இதில் 1.77 இன்ச் QQVGA ஸ்கிரீன், S30+ இயங்குதளத்துடன் Unisoc 6531E பிராசஸர் இருக்கிறது. 800mAh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைம் கொடுக்கும். டூயல் சிம், வயர்லெஸ் FM ரேடியோ, 3.5mm ஹெட்போன் ஜாக், பிரகாசமான டார்ச் லைட் போன்ற வசதிகளும் இதில் உண்டு. இதன் விலை ரூ.999 மட்டுமே.
36
2. ஹெச்எம்டி 100 (HMD 100) –
வெறும் கால் பேசுவதற்கும், அன்றாட அடிப்படை தேவைகளுக்கும் ஒரு சிம்பிளான போன் போதும் என நினைப்பவர்களுக்கு HMD 100 ஒரு நல்ல தேர்வு. இதில் 1.77 இன்ச் ஸ்கிரீன், 4MB ரேம், 4MB இன்டர்னல் மெமரி, மற்றும் 800mAh பேட்டரி பேக்கப் இருக்கிறது. டூயல் சிம் சப்போர்ட், பில்ட்-இன் FM ரேடியோ, LED டார்ச், 3.5mm ஆடியோ ஜாக் போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனும் 999 ரூபாய்க்கு கிடைக்கும்.
இந்திய நிறுவனமான லாவாவின் இந்த மொபைல், அதன் உறுதியான (Rugged) பாடி டிசைனுக்கு பெயர் பெற்றது. இதில் 1.8 இன்ச் கலர் டிஸ்ப்ளே (160×128 பிக்சல்), 4MB ரேம் மற்றும் 32GB வரை மெமரியை அதிகரித்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. 1000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி, டூயல் சிம், வயர்லெஸ் FM, சக்திவாய்ந்த டார்ச் லைட் போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இதன் விலை வெறும் ரூ.988 மட்டுமே.
56
4. ஐடெல் ஏஸ் 3 ஹீரா (itel Ace 3 Heera)
பட்ஜெட் விலையில் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் வேண்டுமென நினைப்பவர்களுக்கு இது ஒரு சரியான போன். இதில் 1.8 இன்ச் ஸ்கிரீன், தெளிவான T9 கீபேட் இருக்கிறது. 1000mAh பேட்டரி மற்றும் முக்கியமாக USB Type-C சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! இதன் சிறப்பு அம்சம் 'கிங் டாக்கர்' (King Talker) வாய்ஸ் அசிஸ்டன்ட் தான். இதன் மூலம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் வழியே போனை இயக்கலாம். ஆட்டோ கால் ரெக்கார்டிங், ப்ளூடூத், வயர்லெஸ் FM, டார்ச் லைட்டுக்கு ஷார்ட்கட் பட்டன் போன்ற வசதிகளும் இதில் இருக்கிறது. இந்த போனின் விலை 949 ரூபாய்.
66
5. ஜியோ பாரத் வி4 (Jio Bharat V4)
வெறும் கீபேட் போன் மட்டும் இல்லாமல், இன்டர்நெட், லைவ் டிவி, UPI பேமெண்ட் வசதிகளும் வேண்டுமென நினைப்பவர்களுக்கு, இதுதான் இந்தியாவின் மலிவு விலை 4G போன். இதில் 4G கனெக்டிவிட்டி, Jio UPI (JioPay) மூலம் சுலபமாக பணம் அனுப்பும் வசதி, JioCinema (சினிமா), JioTV (லைவ் டிவி), JioChat போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. 1000mAh பேட்டரி, 128GB வரை மெமரி கார்டு சப்போர்ட் உண்டு. தமிழ் உட்பட 23 இந்திய மொழிகளை இந்த போன் சப்போர்ட் செய்வது இதன் சிறப்பு. இதன் விலை ரூ.899 மட்டுமே.