உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அமைச்சர் அமைச்சர் குறிப்பிட்டார். சீனா (ஹூவாய், இசட்இடி), பின்லாந்து (நோக்கியா), சுவீடன் (எரிக்சன்), தென்கொரியா (சாம்சங்) ஆகியவை உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கிய மற்ற நான்கு நாடுகளாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமையிலான கூட்டமைப்பு, பிஎஸ்என்எல்லுக்கான 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் நிறுவி வருகிறது.
1 லட்சம் 4ஜி டவர்கள் நிறுவ பிஎஸ்என்எல் இலக்கு
ரூ.19,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், TCS மேற்பார்வையில், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் டெலிமேடிக்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் துணை நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகியவை பிஎஸ்என்எல்லின் 4ஜி விரிவாக்கத்தில் பங்கேற்றுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி டவர்களை பிஎஸ்என்எல்லுக்காக நிறுவுவதை இந்தக் கூட்டமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது.