ஸ்பாட்டிஃபை தனது பிரீமியம் பயனர்களுக்கு lossless ஆடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் சாதனங்களில் கம்ப்ரஸ் செய்யப்படாத, துல்லியமான இசை அனுபவத்தை பெற இந்த வசதியை எப்படி செயல்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இசை ஆர்வலர்கள் கடந்த பல வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த Spotify Hi-Fi சேவை, தற்போது "lossless" ஆடியோவாக பிரீமியம் சந்தாதாரர்களுக்கு உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல வருட தாமதங்கள், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் உரிம சிக்கல்களுக்குப் பிறகு, Spotify நிறுவனம், இசைப் பதிவுகளின் அசல் தரத்தை அப்படியே வழங்கும் 24-பிட்/44.1 kHz FLAC வடிவத்தில் இசையை ஸ்ட்ரீம் செய்யும் வசதியை வழங்குகிறது. இது இசையை சுருக்காமல், அதன் துல்லியமான ஒலித் தரத்தை அப்படியே கேட்க உதவுகிறது.
24
எப்படி Lossless ஆடியோவை செயல்படுத்துவது?
இந்த வசதி படிப்படியாக உலகெங்கிலும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவீடன், நெதர்லாந்து போன்ற முக்கிய நாடுகளில் உள்ள பயனர்கள் ஏற்கனவே இந்த வசதியைப் பெறத் தொடங்கிவிட்டனர். இந்த அம்சம் உங்கள் கணக்கிற்கு கிடைத்தவுடன், ஒரு நோட்டிஃபிகேஷன் வரும். அதன் பிறகு, Settings and Privacy > Media Quality என்ற பகுதிக்குச் சென்று, Wi-Fi, mobile data மற்றும் Downloads ஆகியவற்றுக்கு “Lossless” ஆப்ஷனைத் தேர்வு செய்து இந்த அம்சத்தை இயக்கலாம்.
34
அனைத்து சாதனங்களிலும் வேலை செய்யுமா?
இந்த லாஸ்லெஸ் ஸ்ட்ரீமிங் வசதி மொபைல் போன்கள், டேப்லெட்கள், டெஸ்க்டாப்கள் மற்றும் Spotify Connect வசதி கொண்ட பல சாதனங்களிலும் செயல்படும். சோனி, போஸ், சாம்சங் மற்றும் சென்ஹைசர் போன்ற பிராண்டுகளின் சாதனங்களும் இதில் அடங்கும். இருப்பினும், ஒவ்வொரு சாதனத்திலும் இந்த வசதியை தனித்தனியாக இயக்க வேண்டும். ஒரு சாதனத்தில் இயக்கியது மற்ற சாதனங்களில் தானாகவே இயங்காது. மேலும், லாஸ்லெஸ் ஆடியோ கோப்புகள் பெரியதாக இருப்பதால், டேட்டா பயன்பாட்டை கவனமாக கண்காணிக்கவும் Spotify அறிவுறுத்துகிறது.
லாஸ்லெஸ் ஆடியோவை அனுபவிக்க Wi-Fi இணைப்பு சிறந்தது. ஏனெனில், ப்ளூடூத் இணைப்பில் முழுமையான FLAC தரத்தை ஸ்ட்ரீம் செய்ய போதுமான அலைவரிசை இல்லை. எனவே, சிறந்த அனுபவத்தைப் பெற, Spotify Connect-ஐப் பயன்படுத்தி, புளூடூத் அல்லாத நேரடி இணைப்பு மூலம் இசை கேட்கலாம். இது Bose, Yamaha, Bluesound போன்ற ஸ்பீக்கர்கள் மற்றும் ஒலி அமைப்புகளுக்கு இசையை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. Spotify இந்த சேவையை அறிமுகப்படுத்துவதில் தாமதமாக இருந்தாலும், அதன் 100 மில்லியன் பாடல்களுக்கும் மேலான லைப்ரரியில் பெரும்பாலான பாடல்களில் இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. நீண்ட நாள் காத்திருந்த இசை விரும்பிகளுக்கு, இது ஒரு புதிய, துல்லியமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பிரீமியம் ஹெட்போன்களை எடுத்து, செட்டிங்ஸை மாற்றி, உங்களுக்குப் பிடித்த பாடல்களை புதிய தரத்தில் கேட்கத் தயாராகுங்கள்!