Published : Apr 10, 2025, 09:14 AM ISTUpdated : Apr 10, 2025, 09:42 AM IST
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நீருக்கடியில் 4G சிக்னல் கிடைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு சாத்தியம், இதன் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது.
இந்தியாவில் 5G நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் வியத்தகு முறையில் விரிவடைந்துள்ளது. ஆனால், 5G இன்னும் கிடைக்காத பகுதிகளில், 4G தான் சிறந்த சேவையைத் தருகிறது. ஆனால் ஸ்மார்ட்போன்களுக்கு நீருக்கு அடியிலும் 4G சிக்னல் கிடைக்கிறது என்பதை நம்பமுடிகிறதா?
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்வராஜ் தீபில் கடலுக்கு அடியில் 4G நெட்வொர்க் சிக்னல்களைப் பெறும் ஸ்மார்ட்போன் வீடியோவை தொலைத்தொடர்புத் துறை (DoT) பகிர்ந்துள்ளது. இது இந்தியாவின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் 4G நீருக்கடியில் எவ்வாறு செயல்படுகிறது?
24
4G signal under Sea Water
நீருக்கு அடியில் 4G ரேடியோ அலை
நான்காவது தலைமுறை வயர்லெஸ் தொடர்பு தொழில்நுட்பம், மொபைல் போன்கள் மற்றும் IoT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) சாதனங்கள் போன்ற நிலப்பரப்பு இணைப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. 4G ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி தரவை அனுப்புகிறது. ஆனால் அவை தண்ணீரில் நன்றாகப் பரவ முடியாது.
நீருக்கடியில் 4G சிக்னல்களைப் பெறுவது கடினம், ஏனெனில் தண்ணீர் ரேடியோ சிக்னல்களைக் கணிசமாக பலவீனப்படுத்துகிறது, அவை திறம்பட பயணிப்பதைத் தடுக்கிறது. ஆனால், நீருக்கடியில் 4G இணைப்பை கிடைக்கச் செய்ய, தகவல் தொடர்பு ஒலி அலைகள் (ஒலி சார்ந்த சிக்னல்கள்) அல்லது ஆப்டிகல் சிக்னல்களை (லேசர்கள் அல்லது LEDகள்) நம்பியிருக்க வேண்டும்.
34
4G network underwater
நீர்மூழ்கிக் கப்பல்கள் சோனார்
நீர்மூழ்கிக் கப்பல்கள் சோனார் மூலம் தொடர்பு கொள்வது போலவே ஒலி அலைகளைப் பயன்படுத்தி ஒலித் தொடர்பும் தரவை அனுப்புகிறது. டால்பின்கள் சோனார் மூலம் தொடர்பு கொள்வது போன்றது இது. இந்த தொழில்நுட்பம் 4G நெட்வொர்க்குகள் நீண்ட தூரம் செல்வதற்கு அனுமதிக்கிறது.
இருப்பினும், 4G நெட்வொர்க் வரையறுக்கப்பட்ட அலைவரிசை மற்றும் அதிக தாமதத்தைக் கொண்டது. இதன் விளைவாக கடலுக்கடியில் டேட்டா வேகம் மெதுவாக இருக்கும். இது தவிர கடல்வாழ் உயிரினங்கள், கப்பல்கள் அல்லது அலைகளால் ஏற்பனும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீரில் ஒலியின் வேகம் தகவல் தொடர்பு அமைப்பில் தாமத்தை ஏற்படுத்துகிறது.
44
4G underwater
நீருக்கடியில் செயல்படும் ரோபோக்கள்
நீருக்கடியில் 4G இணைப்பு கிடைப்பது தண்ணீருக்கு மேலே வாழும் மக்களுக்கு சிறிதளவு உதவியாக இருந்தாலும், டைவர்ஸ், நீருக்கடியில் செயல்படும் ரோபோக்கள், நீருக்கடியில் இயங்கும் தானியங்கி வாகனங்கள் (AUV) மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு வேகமான தரவு பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை வழங்க முடியும்.
இதனால் அவர்கள் உயர்தர வீடியோ, சென்சார் தரவை ஸ்ட்ரீம் செய்யலாம். பெரிய கோப்புகளை உடனுக்குடன் அனுப்பலாம். நீருக்கடியில் ஆய்வு செய்ய இது மிகவும் முக்கியமானது.