12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு: செப்.23 ஈக்வினாக்ஸ் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

Published : Sep 23, 2026, 09:03 AM IST

நாசாவின் 2026-ஆம் ஆண்டு வானியல் கணக்கீடுகளின்படி, செப்டம்பர் 23 அதிகாலை 5:35 மணிக்கு சூரியன் பூமியின் நிலநடுக்கோட்டைக் கடக்கும் ‘செப்டம்பர் ஈக்வினாக்ஸ்’ (சம இரவு-பகல் நாள்) நிகழ்ந்தது.

PREV
15
இனி பகல் குறையும், இரவு நீளும்... இந்தியாவில் என்ன மாற்றம்?

வானில் பருவங்கள் தடம் மாறத் தொடங்கிவிட்டன! வட அரைக்கோளத்தில் பருவகால மாற்றத்தைக் குறிக்கும் மிக முக்கிய வானியல் நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது; உலகமே உற்றுநோக்கும் இந்த மாற்றத்தை இந்தியாவும் நேரடியாக அனுபவிக்கிறது.

நாசாவின் 2026-ஆம் ஆண்டு வானியல் கணக்கீடுகளின்படி, செப்.23-ஆம் தேதி அதிகாலை சரியாக 5:35 மணிக்கு (IST) இந்த செப்டம்பர் விஷுவத் (September Equinox) நிகழ்ந்தது. பெயரைக் கேட்டதும், அப்படியானால் இன்று உலகம் முழுக்க துல்லியமாக 12 மணி நேரம் பகலும், 12 மணி நேரம் இரவும் இருக்குமா?"என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? உண்மையில் அப்படி இருப்பதில்லை. விண்வெளியில் நடக்கும் இந்த ஆச்சரியப் பின்னணி என்ன? அது பூமியில் என்னென்ன மாற்றங்களை விதைக்கப் போகிறது?

25
என்ன நடக்கிறது விண்வெளியில்? 'ஈக்வினாக்ஸ்' பின்னணி!

ஆண்டுக்கு இரண்டே முறை மட்டுமே இந்த அற்புதம் நடக்கும்; ஒன்று மார்ச்சில், மற்றொன்று செப்டம்பரில். சூரியனின் மையப் புள்ளி, பூமியின் நிலநடுக்கோட்டை (Equator) நேருக்கு நேராகக் கடக்கும் கணமே ‘ஈக்வினாக்ஸ்’ எனப்படுகிறது.

பூமி நேராகச் சுழலாமல், சுமார் 23.5 டிகிரி சாய்வாக இருந்துகொண்டுதான் சூரியனை வலம் வருகிறது. இதனால்தான் ஆண்டு முழுவதும் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் சூரிய வெளிச்சம் ஏற்ற இறக்கமாக விழுகிறது. ஆனால், இந்த சம இரவு-பகல் நாளில் மட்டும் சமநிலை உருவாகிறது. பூமியின் எந்தவொரு பகுதியும் சூரியனை நோக்கி அதிகமாகச் சாய்ந்திருக்காது. நண்பகல் வேளையில் சூரியன் நிலநடுக்கோட்டுக்கு நேர் உச்சியில் நின்றுகொண்டு, வடக்கு, தெற்கு என இரு அரைக்கோளங்களுக்கும் பாரபட்சமின்றி சமமான வெளிச்சத்தை அள்ளித் தருகிறது.

35
இந்தியாவை இது எப்படிப் பாதிக்கும்?

செப்டம்பரில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும்போது இந்த நிலநடுக்கோட்டைக் கடக்கிறது. வானியல் ரீதியாக, வட அரைக்கோளத்தில் இது 'இலையுதிர்காலத்தின்' (Autumn) தொடக்கம்; தென் அரைக்கோளத்திற்கு இது மலரும் 'வசந்த காலம்' (Spring).

இந்தியாவைப் பொறுத்தவரை இது உடனே இலையுதிர்காலமாக மாறாது; காரணம், நமது பருவநிலையைத் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையும், உள்நாட்டு தட்பவெப்பமுமே தீர்மானிக்கின்றன. இது உலகம் தழுவிய வானியல் நிகழ்வு என்பதால், இந்தியாவிலும் இதன் தாக்கம் தெளிவாகத் தெரியும். செப்.23 அதிகாலை 5:35 மணிக்குச் சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்ததைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பகலும் இரவும் கிட்டத்தட்ட சரிசமமான கால அளவுக்கு வந்துள்ளன. எனினும், ஊருக்கு ஊர் சில நிமிட வித்தியாசங்கள் இருக்கும்.

45
ஈக்வினாக்ஸ் நாளில் நடக்கும் மாயத் தோற்றம் என்ன?

உதாரணமாக, வானியல் கணக்கீடுகளின்படி தலைநகர் டெல்லியில் இன்றைய பகல் பொழுது சுமார் 12 மணி நேரம் 7 நிமிடங்களாக நீடிக்கிறது. சரியாக 12 மணி நேரமாக அமையாததற்குப் பின்னால் 2 காரணங்கள் உண்டு.

சூரியன் வெறும் ஊசி முனைப் புள்ளி அல்ல; அது ஒரு வட்டத் தட்டுப் போல (Disc) பரந்து விரிந்து உள்ளது. அடிவானத்திற்கு அருகில் வரும் சூரிய ஒளியை பூமியின் வளிமண்டலம் லேசாக வளைத்துக் கொடுக்கிறது (Atmospheric Refraction). இதன் காரணமாகவே, கணக்குகளை விடவும் சூரியன் காலையில் சற்றே முன்கூட்டியே உதிப்பது போலவும், மாலையில் சற்று தாமதமாக மறைவது போலவும் மாயத் தோற்றம் உருவாகிறது.

55
இனி என்ன நடக்கும்? தொடங்கும் குளிர்கால முன்னோட்டம்!

வானில் சூரியனின் பயணப் பாதையில் செப்டம்பர் ஈக்வினாக்ஸ் ஒரு மாபெரும் திருப்புமுனை. இனி பூமி டிசம்பர் மாத சங்கிராந்தியை (Winter Solstice) நோக்கி நகரத் தொடங்கும்; இதனால் சூரியனின் நேரடிக் கதிர்கள் நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே விலகிச் செல்லும்.

இதன் விளைவாக, இந்தியாவில் இனிவரும் நாள்களில்:பகல் நேரம் படிப்படியாகக் குறையும்.இரவு நேரம் மெல்ல மெல்ல நீளமாகும்.வானில் நிகழ்ந்த இந்த ஒரு நொடி மாற்றம், அடுத்தடுத்த வாரங்களில் படிப்படியாக வெளிப்பட்டு, சூரியன் நமது வானில் தங்கிச் செல்லும் நேரத்தைக் குறைக்கத் தொடங்கிவிட்டது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories