Samsung Galaxy S25 FE சாம்சங் Galaxy S25 FE இந்தியாவில் விற்பனை ஆரம்பம். ₹12,000 சலுகை, ₹5,000 கேஷ்பேக், இலவச 512GB ஸ்டோரேஜ் அப்கிரேடு! S25 FE விலை & அம்சங்கள்.
12,000 சலுகையுடன் சாம்சங் Galaxy S25 FE இந்தியாவில் விற்பனை ஆரம்பம்! ஃபேன் எடிஷனின் அசுர பலம்!!
Samsung Galaxy S25 FE: ஃபேன் எடிஷன் மாடல்களுக்கு இருக்கும் மவுசுக்கு அளவே இல்லை. காரணம், பிளாக்ஷிப் அம்சங்களை சற்று குறைவான விலையில் கொடுப்பதே. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்திய Galaxy S25 FE ஸ்மார்ட்போன், இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. விற்பனையின் முதல் நாளிலேயே, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ₹12,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
26
Galaxy S25 FE-ன் முக்கிய அம்சங்கள்: என்னவெல்லாம் இருக்கிறது?
புதிய Galaxy S25 FE ஆனது, சாம்சங்கின் முதன்மை போன் ஆன Galaxy S25-ன் எளிமையான (Streamlined) பதிப்பாகும். இதில், புதுமையான Galaxy AI சூட் மற்றும் லேட்டஸ்ட் One UI 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 4,900mAh பேட்டரி, வெப்பத்தைக் கட்டுப்படுத்த உதவும் அப்டேட் செய்யப்பட்ட வேப்பர் சேம்பர் (Vapor Chamber) மற்றும் உறுதியான ஆர்மர் அலுமினியம் (Armor Aluminum) ஃபிரேம் போன்ற தரமான ஹார்டுவேர் அம்சங்கள் இதில் உள்ளன. கேமராக்களைப் பொருத்தவரை, இதில் 50MP + 12MP + 8MP என மூன்று பின்பக்க கேமராக்களும், 12MP முன்பக்க கேமராவும் உள்ளன. மேலும், இந்த போனுக்கு 7 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.
36
Samsung Galaxy S25 FE விலை மற்றும் ஆரம்பக்கட்ட சலுகைகள்: இவ்வளவு லாபமா?
இந்தியாவில் Galaxy S25 FE-ன் ஆரம்ப விலை, 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ₹59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலைகள் இதற்கு மேல் இருக்கும். சாம்சங் நிறுவனம் கவர்ச்சிகரமான லாஞ்ச் சலுகைகளை அறிவித்துள்ளது:
• கேஷ்பேக்: டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு ₹5,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.
• ஈஎம்ஐ: வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத ஈஎம்ஐ (No-Cost EMI) விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
• பண்டில் சலுகை: Galaxy Buds 3 FE வாங்குபவர்களுக்கு ₹4,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
56
விலை மற்றும் ஆரம்பக்கட்ட சலுகைகள்
• இலவச ஸ்டோரேஜ் அப்கிரேடு: இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். இதில், 256GB ஸ்டோரேஜ் மாடலுக்கு செலுத்தி, 512GB ஸ்டோரேஜ் மாடலை இலவசமாகப் பெறலாம் (₹12,000 வரை லாபம்).
• திரை பாதுகாப்பு: ₹4,199 கூடுதல் கட்டணத்தில் இரண்டு வருட ஸ்கிரீன் ப்ரொடெக்ஷன் பிளானும் கிடைக்கிறது.
66
எங்கே வாங்கலாம்? மற்றும் கலர் ஆப்ஷன்கள்
இந்த ஸ்மார்ட்போன் தற்போது Navy, Jetblack, மற்றும் White ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம், பிரத்யேக கடைகள், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் தளங்களில் இதை வாங்கலாம். பிளாக்ஷிப் அம்சங்களை அனுபவிக்க விரும்பும் சாம்சங் ரசிகர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.