இது அதிகப்படியான புகைப்படங்கள், வீடியோக்கள், ஆப்கள் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு உதவும். கேமரா பகுதியில் 50MP பிரதான லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 10MP டெலிபோட்டோ என முப்பெரும் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டு, 4,000mAh பேட்டரி மற்றும் 25W விரைவு சார்ஜிங்கும் உள்ளது.
விலை விவரங்களை பார்க்கையில் போனின் ஆரம்ப விலை ரூ.74,999. ஆனால் தற்போது அமேசானில் இது ரூ.41,795-க்கு விற்கப்படுகிறது. இது சுமார் 44% தள்ளுபடி, அதாவது ரூ.33,000-க்கும் அதிகமான விலை குறைப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல், Amazon Pay ICICI வங்கி கார்டில் கூடுதலாக ரூ.1,253 கேஷ்பேக் கிடைக்கிறது. இதன் பிறகு, Galaxy S24 5G-யை வெறும் ரூ.40,542 என்ற குறைந்த விலையில் வாங்க முடியும். குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரீமியம் செயல்திறன் கொண்ட போனை எதிர்பார்த்திருந்தால், இந்த சலுகை தவற விடக்கூடாதது ஆகும்.