அடுத்த 20 ஆண்டுகளில்... விண்வெளியில் கோடிக்கணக்கான மக்கள்; நிலவில் ரோபோக்கள் ராஜ்ஜியம் - கணிக்கும் அமேசான் ஜெஃப் பெசோஸ்!

Published : Oct 19, 2026, 06:04 PM IST

அடுத்த 2 தசாப்தங்களில் (2045-க்குள்) கோடிக்கணக்கான மக்கள் பூமியைத் தாண்டி விண்வெளியில் வசிக்கத் தொடங்குவார்கள் என்று அமேசான் மற்றும் புளூ ஆரிஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கணித்துள்ளார்.

PREV
15
பூமியை விட்டு வெளியேறும் மனிதர்கள்... நிலவில் ரோபோக்கள் ராஜ்ஜியம்!

இன்னும் இருபதே ஆண்டுகளில் மனித இனம் பூமியின் எல்லைகளைத் தாண்டி விண்வெளியில் நிரந்தரமாகக் குடியேறத் தொடங்கும்; அங்கு கடினமான பணிகளை மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களே செய்யும் என்ற அதிரடியான எதிர்காலச் சித்திரத்தைத் தீட்டியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.

இத்தாலியன் டெக் வீக் (Italian Tech Week) மாநாட்டில் உரையாற்றிய அவர், ஏரோஸ்பேஸ் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் (Blue Origin) அனுபவங்களையும், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தின் அசுர வேகப் பாய்ச்சலையும் அடிப்படையாக வைத்துப் பேசியவை உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

25
2045: பூமிக்கு வெளியே கோடிக்கணக்கான மனிதர்கள்

அடுத்த 2 தசாப்தங்களில் விண்வெளியில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்க் தொடங்குவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன் என்று உற்சாகத்தோடு கூறிய பெசோஸ், இந்த பிரம்மாண்ட இடப்பெயர்வு பலரும் கணிப்பதை விட மின்னல் வேகத்தில் நிகழும் என்று தெரிவித்தார். ஆனால், இது ஏதோ வாழ வழியின்றி பூமியிலிருந்து மனிதர்கள் தப்பியோடும் கட்டாயக் குடியேற்றமாக இருக்காது என்பதையும் அவர் தெளிவாகப் பதிவு செய்தார்.

மனிதர்கள் அங்கு கட்டாயத்தின் பேரில் சென்று வாழப் போவதில்லை; தங்களுக்குப் பிடித்து, தானாக விரும்பித்தான் அங்கு குடியேறுவார்கள். சொல்லப்போனால், மனிதர்கள் விண்வெளியில் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவுமே நமக்கு இல்லை.

35
நிலவில் மனிதர்களுக்கு நோ என்ட்ரி: களமிறங்கும் ரோபோக்கள்

சந்திரனின் தரைப்பரப்பிலும், விண்வெளியின் பிற பகுதிகளிலும் மனிதர்கள் சென்று ஆபத்தான முறையில் கடின உழைப்பைச் செலுத்த வேண்டிய அவசியமே இருக்காது என்கிறார் பெசோஸ்.

நிலவின் மேற்பரப்பிலோ அல்லது வேற்றுலகத்திலோ ஏதேனும் ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்றால், அங்கு மனிதர்களுக்குப் பதில் எளிதாக ரோபோக்களை அனுப்பிவிடலாம். மனிதர்களை அனுப்புவதோடு ஒப்பிடும்போது, ரோபோக்களைப் பயன்படுத்துவது செலவை மிகக் கடுமையாகக் குறைப்பதுடன், திட்டத்தின் வேகத்தையும் செயல்திறனையும் பல மடங்கு அதிகரிக்கும். AI ரோபோட்டிக்ஸ் இணைந்து மனிதர்களைக் கடுமையான, ஆபத்து நிறைந்த வேற்றுலகப் பணிகளிலிருந்து விடுவித்து, பாதுகாப்பான மற்றும் பரந்த விண்வெளி ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

45
AI மனிதர்களின் எதிரியா? பெசோஸின் மாற்றுப் பார்வை

உலகம் முழுக்க பல தொழில்நுட்ப வல்லுநர்கள் AI மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடும், மனித குலத்திற்கே ஆபத்தாக முடியும்" என்று அச்சம் தெரிவித்து வரும் சூழலில், பெசோஸ் இதற்கு முற்றிலும் எதிரான, நம்பிக்கையூட்டும் ஒரு வாதத்தை முன்வைத்தார்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மனிதர்களின் எந்தவொரு புதுமைக் கண்டுபிடிப்பும் சமூகத்தின் வளத்தை உயர்த்தவே செய்திருக்கிறது என்ற அவர், நமது மனித நாகரிகத்தின் வளம் முழுவதுமே நாம் உருவாக்கிய கண்டுபிடிப்புகளிலிருந்துதான் பிறந்தது. மனிதகுல வரலாற்றையே தலைகீழாக மாற்றி செழிப்பை உருவாக்கிய 'கலப்பை' போன்ற ஒரு மாபெரும் கருவிதான் AI. புதிய கருவிகள் மனித சமூகத்தின் செழுமையை மட்டுமே பெருக்கும்; அந்த வளர்ச்சிப் பாதை AI தொழில்நுட்பத்திலும் அப்படியே தொடரும் என்றார்.

தொழில்நுட்பம் வளரும் வேகத்தைப் பார்த்தால், இன்னும் இருபது வருடங்களில் 'வீடு எங்கே?' என்ற கேள்விக்கு நிலவையும் விண்வெளி நிலையங்களையும் மக்கள் கைகாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

55
ஜெஃப் பெசோஸின் அதிரடி விண்வெளி கணிப்பு!

அடுத்த 20 ஆண்டுகளில் விண்வெளியில் கோடிக்கணக்கான மக்கள்! நிலவில் ரோபோக்கள் ராஜ்ஜியம்... எதிர்கால விண்வெளி வாழ்க்கை குறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அதிரடி தகவல்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories