கேமிங் பிரியர்களே தயாரா? ஜெட் வேகத்தில் வருகிறது ரெட்மி டர்போ 5 சீரிஸ்!

Published : Jan 27, 2026, 02:33 PM IST

Redmi Turbo ரெட்மி நிறுவனம் தனது புதிய 'டர்போ 5' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி 29 அன்று அறிமுகம் செய்கிறது. இத்துடன் ரெட்மி பட்ஸ் 8 ப்ரோ மற்றும் பேட் 2 ப்ரோ ஆகியவையும் வெளியாகின்றன. எதிர்பார்ப்புகள் என்ன?

PREV
15
Redmi Turbo

ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் மற்றும் பிளாக்‌ஷிப் கில்லர் (Flagship Killer) மொபைல்களுக்குப் பெயர்போன ரெட்மி நிறுவனம், புத்தாண்டின் முதல் அதிரடியை நிகழ்த்தத் தயாராகிவிட்டது. கேமிங் மற்றும் வேகத்தை விரும்பும் இளைஞர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ரெட்மி டர்போ 5 சீரிஸ்' (Redmi Turbo 5 Series) வரும் ஜனவரி 29ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வெறும் மொபைல் போன் மட்டுமல்ல, கூடவே இன்னும் சில அட்டகாசமான கேட்ஜெட்களையும் ரெட்மி களமிறக்குகிறது.

25
வேகம்... விவேகம்... 'டர்போ 5' (Turbo 5)

ரெட்மியின் 'டர்போ' வரிசை என்றாலே அது வேகத்திற்குப் பெயர்போனது. இம்முறை வெளியாகவுள்ள சீரிஸில் இரண்டு முக்கிய போன்கள் இடம்பெறுகின்றன:

1. Redmi Turbo 5: இது வழக்கமான வேகமான பெர்ஃபார்மன்ஸ் கொண்ட மாடலாக இருக்கும்.

2. Redmi Turbo 5 Max: பெயருக்கு ஏற்றார் போலவே, இது பேட்டரி மற்றும் டிஸ்பிளேவில் 'மேக்ஸ்' (Max) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இதில் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் (Snapdragon) ப்ராசஸர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது, இது பப்ஜி (PUBG), கால் ஆஃப் டூட்டி (Call of Duty) போன்ற கேம்களை 'லேக்' (Lag) இல்லாமல் விளையாட உதவும்.

35
இசைப் பிரியர்களுக்கு 'Buds 8 Pro'

மொபைல் மட்டும் போதுமா? பாட்டு கேட்கத் தரமான ஹெட்செட் வேண்டாமா? அதற்காகவே வருகிறது 'ரெட்மி பட்ஸ் 8 ப்ரோ' (Redmi Buds 8 Pro). முந்தைய வெர்ஷனை விட இதில் 'நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) மற்றும் பேட்டரி பேக்கப் பல மடங்கு மேம்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. டிசைனிலும் பிரீமியம் லுக் கொடுக்கப்பட்டுள்ளது.

45
டேப்லெட் சந்தையில் போட்டி - 'Pad 2 Pro'

ஏற்கனவே ரெட்மி பேட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அடுத்த கட்டமாக 'ரெட்மி பேட் 2 ப்ரோ' (Redmi Pad 2 Pro) அறிமுகமாகிறது. மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களைக் குறிவைத்து, கச்சிதமான விலையில் அதிக வசதிகளுடன் இது வெளிவரலாம். பெரிய திரை, டால்பி அட்மாஸ் சவுண்ட் ஆகியவை இதன் ஹைலைட்.

55
எதிர்பார்ப்பு என்ன?

ஜனவரி 29 அன்று சீனாவில் அறிமுகமாகும் இந்த சாதனங்கள், அடுத்த சில வாரங்களில் இந்திய சந்தைக்கும் வரலாம். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரெட்மி இப்படி ஒரு மெகா கூட்டணியுடன் வருவது, மற்ற நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

விலை மற்றும் முழுமையான சிறப்பம்சங்கள் தெரிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. அதுவரை உங்கள் பர்ஸை பத்திரமாக வைத்திருங்கள்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories