ரியல்மி நிறுவனம், 15,000mAh பேட்டரி மற்றும் 320W அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் பேட்டரி தொழில்நுட்பத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு பார்வை!
ஸ்மார்ட்போன் பேட்டரி தொழில்நுட்பத்தின் புதிய அத்தியாயம்
ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி ஆயுள் என்பது பயனர்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. இந்த சவாலுக்கு தீர்வாக, ரியல்மி நிறுவனம் எதிர்காலத்திற்கான ஒரு முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன் சமீபத்திய கான்செப்ட் ஸ்மார்ட்போனில் 15,000mAh பேட்டரி திறன் இருப்பதாக அறிவித்துள்ளது. இது, ஏற்கனவே ரியல்மி அறிமுகப்படுத்திய 10,000mAh கான்செப்ட் போனை விடவும் ஒரு பெரிய பாய்ச்சலாகும். இந்த புதிய சாதனம், தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
25
ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாட்கள் நீடிக்கும்!
ரியல்மி, தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் “15,000mAh” என்று பொறிக்கப்பட்டிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளது. இது பேட்டரி தொழில்நுட்பத்தில் நிறுவனம் அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், தொடர்ந்து 50 மணி நேரம் வீடியோ பார்க்க முடியும் என்றும், சாதாரண பயன்பாட்டில் ஐந்து நாட்கள் வரை தாங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "இது பேட்டரி ஆயுள் மட்டுமல்ல, பேட்டரி சுதந்திரம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 திரைப்படங்கள் தொடர்ந்து பார்க்கலாம், 30 மணி நேரம் தொடர்ந்து விளையாடலாம், அல்லது மூன்று மாதங்கள் வரை ஸ்டாண்ட்பை மோடில் வைத்திருக்கலாம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது
35
வெறும் இரண்டு நிமிடங்களில் 50% சார்ஜ் - ஒரு புரட்சி!
இந்த மிகப்பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்ற கேள்வி எழுகிறது. அதற்குரிய பதிலையும் ரியல்மி அளித்துள்ளது. இந்த கான்செப்ட் போன், 320W அதிவேக சார்ஜிங் வசதியுடன் வரக்கூடும். இது "Supersonic" சார்ஜிங் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் வெறும் இரண்டு நிமிடங்களில் பேட்டரியை 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று ரியல்மி கூறுகிறது.
இந்தச் சாதனத்தின் எடை மற்றும் தடிமன் குறைவாக இருப்பதற்காக, சிலிக்கான்-கார்பன் பேட்டரியைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ரியல்மி நிறுவனம் 7,000mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் வசதியுடன் கூடிய புதிய P4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
55
புதிய தொழில்நுட்பம்,
இந்த புதிய தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் பயனர்களின் சார்ஜிங் பற்றிய கவலைகளை முழுவதுமாக நீக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.