Realme P4 Power: 10,001mAh மெகா பேட்டரியுடன் களமிறங்கும் புதிய 'மான்ஸ்டர்' போன்! (ரியல்மி P4 பவர்: இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி போன் விரைவில் அறிமுகம்!)
ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த ரியல்மி (Realme) நிறுவனம் தயாராகிவிட்டது. 'ரியல்மி P4 பவர்' (Realme P4 Power) என்ற புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதன் சிறப்பம்சமே அதன் பிரம்மாண்டமான 10,001mAh பேட்டரிதான். இது பயனர்களுக்கு நீண்ட நேர பேட்டரி பேக்கப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
10,001mAh பேட்டரி & 8 வருட கோரண்டி!
சந்தையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட இது தனித்து நிற்கக் காரணம் இதன் பேட்டரி திறன்தான். 10,001mAh பேட்டரியைக் கொண்டிருந்தாலும், இதன் எடை வெறும் 219 கிராம்தான் என்பது ஆச்சரியமான தகவல். மேலும், 1,650 முறை சார்ஜ் செய்த பிறகும் பேட்டரி 80% ஆரோக்கியத்துடன் இருக்கும் என்றும், 8 வருடங்களுக்கு பேட்டரி ஆயுள் நீடிக்கும் என்றும் ரியல்மி நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
35
டிஸ்பிளே & ப்ராசஸர் (Display & Processor)
இந்த போன் 6.78-இன்ச் வளைந்த அமோலேட் (Curved AMOLED) திரையுடன் வர உள்ளது. இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) வசதியைக் கொண்டிருக்கும், இது கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்தை மென்மையாக்கும். மேலும், இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, இதில் 50MP முதன்மை கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா வழங்கப்படலாம். செல்ஃபி எடுக்க 16MP கேமரா இருக்கும். இதன் பின்புறம் 'டிரான்ஸ்வியூ' (TransView) டிசைனுடன், மேட் ஃபினிஷ் (Matte Finish) மற்றும் கண்ணாடி போன்ற தோற்றத்துடன் இரண்டு வண்ணங்களில் கலந்திருக்கும். ஆரஞ்சு, நீலம் மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் இது கிடைக்கும்.
55
கூடுதல் சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தில் செயல்படும். தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்க IP68 மற்றும் IP69 சான்றிதழ் பெற்றிருக்கும். மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) வசதியும் இதில் உள்ளது, இதன் மூலம் மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.