இன்று நம்மில் பலர் பாட்டு கேட்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் யூடியூப்பைத்தான் (YouTube) நம்பியிருக்கிறோம். ஆனால், அதில் ஒரு பெரிய குறை என்னவென்றால், வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போது வேறொரு ஆப்பைத் திறந்தாலோ அல்லது ஸ்கிரீனை ஆஃப் செய்தாலோ வீடியோ நின்றுவிடும். "Background Play" வேண்டும் என்றால் காசு கொடுத்து 'YouTube Premium' வாங்க வேண்டும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்! ஒரு பைசா கூட செலவில்லாமல் இதைச் செய்ய ஒரு வழி இருக்கிறது.
25
Brave Browser - ஒரு வரப்பிரசாதம்
கூகுள் குரோம் (Google Chrome) போல 'Brave Browser' என்றொரு இணைய உலாவி உள்ளது. இது பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போது இந்த பிரவுசர், யூடியூப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல், யூடியூப் வீடியோக்களை Background-ல் ஓட விடலாம்.
35
எப்படி பயன்படுத்துவது?
1. உங்கள் ஸ்மார்ட்போனில் (Android அல்லது iOS) 'Brave Browser' ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.
2. அதில் 'Settings' பகுதிக்குச் செல்லவும்.
3. அங்கு 'Media' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
4. அதில் 'Background Play' என்பதை 'Enable' (ஆன்) செய்யவும்.
5. அவ்வளவுதான்! இனி நீங்கள் Brave Browser-ல் யூடியூப் வீடியோவை ஓடவிட்டுவிட்டு, தாராளமாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம் அல்லது ஸ்கிரீனை ஆஃப் செய்துவிட்டு பாட்டு கேட்கலாம்.
Brave Browser-ன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது தேவையற்ற விளம்பரங்களை (Ads) தானாகவே தடுத்துவிடும். யூடியூப் வீடியோக்களுக்கு நடுவே வரும் விளம்பரங்கள் இதில் வராது என்பதால், வீடியோ பார்க்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
55
எவ்வளவு காலம் நீடிக்கும்?
யூடியூப் நிறுவனம் இதுபோன்ற மூன்றாம் தரப்பு பிரவுசர்களைத் தடுப்பதில் மும்முரமாக உள்ளது. ஆனால், Brave நிறுவனம் தொடர்ந்து இதற்குத் தீர்வு கண்டு வருகிறது. இப்போதைக்கு இது ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. முன்னர் 'JioSphere' என்ற பிரவுசரிலும் இந்த வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.