வாட்ஸ்அப்பில் மெட்டா புதிய வசதியை அளித்துள்ளது. இது முன்பை விட புகைப்படங்களை பகிர சிறப்பாக செய்துள்ளது.இதன் மூலம் நீங்கள் எச்டி புகைப்படங்களைப் பகிர முடியும். மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம் சேனலில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இப்போது வரை சாதாரண குவாலிட்டி புகைப்படம் பயன்பாட்டில் இருக்கிறது. இனிமேல் நீங்கள் அதன் தரத்தை மாற்றலாம். இது உங்களுக்கு விரைவில் கிடைக்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த, புகைப்படத்தைப் பகிரும் போது HD ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் ஒருவருடன் எச்டி படத்தைப் பகிரும் போது, அந்தப் படத்தின் மூலம்தான் மற்றவர் அதைப் பற்றி அறிந்து கொள்வார்.
முதலில் நீங்கள் HD புகைப்படத்தை அனுப்ப விரும்பும் சாட்டை திறக்கவும். இதற்குப் பிறகு, கீழே இருக்கும் பிளஸ் ஐகானைத் தட்டவும், பின்னர் புகைப்படம் மற்றும் வீடியோ லைப்ரரி தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அனுப்ப விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும். படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, திரையில் HD என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் கிளிக் செய்து புகைப்படத்தை அனுப்பவும்.